Lushgreen

காட்டை அழிச்சு வீடு பங்களா எல்லாம் கட்டினோம்! அதனுடைய விளைவு தான் இன்னிக்கு நம்மள ஆட்டிப்படைக்குது! இதிலிருந்து தப்புவது ரொம்ப கடினம் பங்கு!

Jun 13 2021 10:06:00 AM

கடந்த சில நாட்களாக சீனாவின் நகருக்குள் புகுந்து அலப்பறை செய்து வரும் யானைகள் கூட்டம் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள வனப்பகுதியை சேர்ந்த 16 யானைகள் நகரில் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து மாகாண தலைநகர் குன்மிங் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யானைகள் செய்யும் சேட்டைகள் குறித்த செய்திகள் ஒரு வாரத்திற்கும் மேலாக உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

elephants-in-china forest-to-city

சீனாவின் வெய்போ என்ற சமூக வலைதளத்தில் யானைகள் குறித்த புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. சீன சாலைகளில் நடந்து செல்லும் யானைகளின் சாகசங்களை தினசரி சராசரியாக 20 கோடி பேர் வரை உலகம் முழுவதும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்த்து வருகின்றனர். யானைகள் ஹாயாக தூங்கும் படத்தை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

elephants-in-china forest-to-city

ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே காட்டில் அங்குமிங்கும் நடந்து திரிந்து 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ள இந்த யானைகள் சில மாதங்களுக்கு முன்பு நகரத்திற்குள் புகுந்து உணவுக்காக சில கடைகளை சூறையாடியுள்ளன. இதுவரை மனிதர்களை இந்த யானைகள் தாக்கவில்லை. வயல்வெளிகளில் புகுந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சோளப்பயிர்களை சாப்பிட்டுள்ளன. ஆளில்லா குட்டி விமானம் மூலம் யானைகளின் நடமாட்டத்தை சீன அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

elephants-in-china forest-to-city

யானைகளின் பாதையில் ஆங்காங்கே போலீஸ் மற்றும் அவசர கால உதவிக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. யானைகளை துன்புறுத்தாமல் வனத்திற்குள் கொண்டு சேர்க்க சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்கள் யாரும் பட்டாசு வெடித்து யானைகளை துன்புறுத்துவது, துரத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.