#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்?
  • 17:30PM Sep 19,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:30PM Sep 19,2019 Chennai

வடகிழக்கு பருவ மழை தொடங்குவதையொட்டி அங்கங்கு மின்விபத்துகள் நடந்து வருகிறது. அண்மையில் கூடக் கல்லூரி வாலிபர் ஒருவர் மின்விபத்தால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மின்விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். மழை காலங்களில் ரோட்டில் அல்லது வீட்டில் அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பி மற்றும் மின் கம்பங்களை யாரும் தொட வேண்டாம்.

#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி??? ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது!!!

via GIPHY

இடி - மின்னல் போது டி.வி, மிக்சி, கிரைண்டர், கணினி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அதேபோல ஈரமான கையுடன் சுவிட்சு ஆன் செய்யவேண்டாம். மின் கம்பங்களில் மாடு, ஆட்டை கட்டவேண்டாம், அதேபோல மின் கம்பங்களில் கொடி, கயிறு கட்டி துணிகளைக் காயவைக்கக் கூடாது. மழை காலங்களில் மின்சாதனங்களைப் பயன்படுத்த நில இணைப்புடன் கூடிய 3 மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்புக் கொடுத்திருக்க வேண்டும். இடி - மின்னலுடன் கூடிய மழையின் போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவையின் கீழ் நிற்பதை தவிர்க்கவேண்டும்.

via GIPHY

திடிரென்று மின்சாரத்தினால் விபத்து ஏற்பட்டால் அப்போது ஏற்படும் தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். உயர் அழுத்த மின் கோபுரங்களுக்குக் கீழ் மற்றும் அதன் அருகில் நின்று செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மழை காலங்களில் மின் தொடர்பான புகார்களுக்கு 0452-1912 மற்றும் 0452- 2560601 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top