#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட்! திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்!
  • 18:05PM May 23,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:05PM May 23,2019 Chennai

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு முக்கியக் கட்சிகளிலும் ஏகப்பட்ட வாரிசுகள் இறக்கிவிடபட்டனர். இந்தத் தேர்தல் அடுத்தத் தலைமுறையினருக்கான தேர்தல் என்பது போலக் கட்சி தலைவர்களின் அடுத்தத் தலைமுறைக்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வாரிசுகளைக் காட்டிலும் திமுகவின் வாரிசுகள் அடித்துத் தூள் கிளப்பியுள்ளனர்.

திமுகச் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன்,தென் சென்னையில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன்,வட சென்னையில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி ஆகியோர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். ஆனால் அதிமுகச் சார்பில் போட்டியிட்ட வாரிசுகள் சொதப்பியுள்ளனர். தேனி தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே இதுவரை முன்னிலையில் உள்ளார். கடந்த முறை தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் இம்முறை பின்னடைவை பெற்றுள்ளார்.

இவர்களைத் தவிர்த்து பாமக சார்பாகப் போட்டியிட்டு ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார். இவரைப் போலக் கள்ளக்குறிச்சியில் தேமுதிக சார்பாகப் போட்டியிட்ட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்சும் பின்னடைவு பெற்றுள்ளார். இம்முறை தேர்தல் முடிவில், தேசிய கட்சிகளுக்கு இணையாகத் திமுகக் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Top