#Cash : வி ஐ பி களுக்கு மாதம் ரூ 10000! ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வாக்குறுதி !!
  • 08:20AM Apr 20,2019 Delhi
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 08:20AM Apr 20,2019 Delhi

தேர்தலில்  அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக பல வாக்குறுதிகள்  கொடுப்பார்கள் ஆனால்  அவர்கள் அதை நிறைவேற்றுவார்களா என்பது தனி கதை  இது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்,தற்பொழுது நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் சஞ்கி விராசாத் எனும் அரசியல்  கட்சி பல கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

rupees.png

அதில் மிக முக்கியமான வாக்குறுதியாக அனைவரையும் கவர்ந்தது , வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 உதவி தொகையாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும்  50 சதவீத தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும்என்ற வாக்குறுதியும் தான்

alchocol.jpg

மேலும் இவர்கள்   இஸ்லாமியர்களுக்கு ஈகை திருநாளை முன்னிட்டு ஒரு ஆடு வழங்கப்படும் என்றும், பிஎச்டி வரை படிப்பவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

photo-1524024973431-2ad916746881.jpg

இது மட்டுமல்லாமல்  மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ். அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள், பெண்குழந்தைகள் பிறந்தால் ரூபாய் 50,000 வயதானவர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் என பல வாக்குறுதிகளை தந்துள்ளனர் ,செய்றங்களோ இல்லையோ கேட்க நல்லாத்தான் இருக்கு என்று டெல்லி மக்கள்  பலரும் கூறிவருகிறார்கள் .

 

Share This Story

துரை முருகன்

Top