Timeless

கரணம் தப்பினாலும் ம ரணம் நிச்சயம்! இதையும் தாண்டி நீங்கள் சாகசம் செய்யவேண்டுமென்று நினைத்தால் அப்புறம் உங்கள் இஷ்டம் தான்!

Jun 08 2021 06:48:00 PM

உலகின் மிக ஆ பத்து நிறைந்த நடைபாதைகளுள் ஒன்றாக இருப்பது தான் எல் காமினிடோ டெல் ரே. இந்த இடம் ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ளது. ஆபத்தான இடம் என்பதால் பல ஆண்டுகளாக இங்கு செல்வதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக அனுமதி தரப்பட்டது.

el-kaminido-del-re bridge-in-spain

தெற்கு ஸ்பெயினின் செங்குத்தான பாறைகளுக்கு இடையே அமைந்துள்ள குறுகிய நடைபாதையான எல் காமினிடோ டெல் ரே 1905ம் ஆண்டு இரண்டு நீர்மின் அணைகளை இணைப்பதற்காக கட்டப்பட்டது. ஆரம்பகாலத்தில் மக்கள் இந்தப்பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் முறையாக பராமரிப்பு இல்லாததால் பாலத்தின் தரை பலகைகளும், இதர சில பாகங்களும் உடைந்து ஆற்றில் விழுந்தது.

el-kaminido-del-re bridge-in-spain

இந்த பாலத்தின் வழியே செல்லும் பலர் கவனமாக செல்லாத காரணத்தினால் கீழே விழுந்து இறந்து போவது வாடிக்கையானது. 1999 மற்றும் 2000 ஆண்டுகளில் மலையேற்ற வீரர்கள் இந்தப்பகுதியில் பயணம் செய்ய நினைத்து பிறகு பாலத்தில் விழுந்து இறந்துபோன பிறகு இந்தப்பாதை அரசாங்க அதிகாரிகளால் மூடப்பட்டது. பல வருடங்களாக இந்தப்பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

el-kaminido-del-re bridge-in-spain

பணிகள் நிறைவடைந்து மீண்டும் கடந்த 2015ம் ஆண்டு இந்த ஆ பத்தான நடைபாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஐந்து மைல் நீளமுள்ள இந்த நடைபாதையை கடக்க மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மிகவும் அழகான இடமாக இருந்தாலும் ஆ பத்து நிறைந்த இந்தப்பாதை கடப்பதற்கு சற்று கடினமான பாதையாகத்தான் இன்று வரை இருக்கிறது. இந்தப்பாதையில் தற்போது தினமும் 600 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால் நிச்சயம் இந்த இடத்தை கடந்து செல்லலாம்.