அஷ்ட சிரஞ்சீவிகள்..
  • 05:52AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 05:52AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

சகா வரம் பெற்றவர்களை சீரஞ்சீவி என்று அழைப்பார்கள்.நம்முடைய புராணங்களின் படி அஷ்ட சிரஞ்சீவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.இந்த எட்டு சிரஞ்சீவிகளும் சாதாரண மனிதர்களை போல் பிறந்து வளர்ந்து கடவுளின் வரத்தாலோ அல்லது சாபத்தாலோ சாகாவரம் பெற்றுள்ளனர் என்று நம்முடைய புராணங்களின் மூலம் தெரிகிறது.

மார்க்கண்டேயன்

Related image

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.

பலி சக்கரவர்த்தி

Image result for kripacharya

மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன்.மகாபலி ஒரு கண்டத்தை நியாமாக ஆண்டுகொண்டிருந்தார். ஆனால் தன்னிடம் பிச்சை கேட்டு வந்த, தேவர்களின் இனத்தைச் சேர்ந்த, வாமனர் என்ற ஓர் ஏழை பிராமணனுக்குத் தான் கொடுத்திருந்த ஒரு வாக்கிலிருந்து அவர் பின்வாங்க விரும்பாத காரணத்தால், அவர் தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்

ஆஞ்சிநேயர்

              Image result for Hanuman

அனுமன் என்பவர் இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உண்டு. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.

கிருபாச்சாரியார்

Related image

கௌதம முனிவரின் பேரன் சரத்வான். சரத்வான் பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தவன். இளமைக்காலத்தில் வேதங்களைப் படிப்பதில் நாட்டமின்றி அனைத்து ஆயுதங்களையும் கற்றுத் தேர்ந்தான். அவரை  விற்போட்டியில் யாராலும் வெல்லமுடியாதிருந்தது. இதனால் அச்சமடைந்த தேவர் மன்னன் இந்திரன் அவறது ஆற்றலை கட்டுப்படுத்த தேவலோக அழகி ஜனபதியை திருமணத்தை மறுக்கும் சரத்வானிடம் அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காமத்தை எதிர்கொள்கிறான்.இருப்பினும் அவனிடமிருந்து விந்து கீழே விழுகிறது. செடிகளில் விழுந்த விந்து, இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள்.இதனை அறியாத சரத்வான் அங்கிருந்து தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான்.அவ்வழியாக வரும் சாந்தனு அரசன் இக்குழந்தைகளின் அழகில் மனதை பறிகொடுத்தவனாய் அவர்களை எடுத்துச் சென்று கிருபன்,கிருபி எனப் பெயரிட்டு வளர்க்கிறான். பின்னால் இதனை அறியவரும் சரத்வான் அரண்மனைக்கு வந்து தனது அடையாளத்தை நிலைநிறுத்தி குழந்தைகளுக்கு வில்வித்தை,வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் பிற உலக இரகசியங்களை கற்றுக் கொடுக்கிறான். இவ்வாறு பல கலைகளிலும் கற்றுத்தேர்ந்த கிருபன் கௌரவர் மற்றும் பாண்டவ இளவரசர்களுக்கு போர்க்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்.

பரசுராமர்

Image result for parasuramar

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்றும் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என்றும் கூறப்படுகிறது. இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.

விபீஷணர்

 

Image result for vibhishana

விபீடணன் (விபீஷணன்), விபீசணன் அல்லது வீடணன் இராமாயணத்தில் இடம்பெறும்  இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.[1] இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான்.

வியாசர்

Related image

வியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.

அஸ்வத்தாமா

Image result for ashwathama

அசுவத்தாமன்,குரு துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் நம்பிக்கைப்படி, சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், கௌரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற பாண்டவர் படைகளின் தலைமைப்படைத்தலைவர் திருஷ்டத்யும்னனை தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் (உபபாண்டவர்கள்), பாண்டவர் தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top