Exquisite

இவர் இப்படி ஒரு காரியம் ஏன் செய்தார் ? வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

Apr 08 2021 08:30:00 PM

ஒரு மன்னனின் பலமே அவனது மக்கள் தான். மக்களுக்காக பல தியாகங்களை செய்த மன்னர்களை பார்த்திருப்போம். நாட்டு மக்களுக்காக தங்களுடைய உயிரையும் துச்சமாக எண்ணி வீர மரணம் அடைந்த மன்னர்களை பற்றியும் வரலாறு நமக்கு கூறுகிறது. ஆனால் இந்த மன்னரோ  வித்தியாசமான வரலாறு ஒன்றை கொண்டுள்ளார்.

egypt-ramsees

எகிப்து நாட்டின் பேரரசராக ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ராம்சீஸ். அவர் தன்னுடைய நாட்டு மக்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். மக்களும் மன்னர் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருந்தனர். மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் கெட்டுவிடக்கூடாது என்று நினைத்த அவர் அதற்காக வரலாற்றின் பக்கங்களையே மறைத்தார்.

egypt-ramsees

கி.மு 1288ம் ஆண்டில் ஹிட்டைட் என்ற பேரரசுடன் நடந்த போரில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார் ராம்சீஸ். ஆனால் இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தால் அவருடைய மரியாதையை இழக்க நேரிடும் என்பதால் அதை மறைக்கும் விதமாக போரில் மிகப்பெரிய வெற்றியடைந்ததாக மக்களிடம் அறிவித்து ஒரு நினைவு மண்டபத்தையும் எழுப்பினார். சமீபத்தில் நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியில் தான் அவர் தோல்வியை மறைத்த விஷயம் தெரிய வந்துள்ளது. மக்களிடம் இருந்த மரியாதைக்காக வரலாற்றையே இத்தனை வருடங்களாக அவர் மறைத்து விட்டார்.