Timeless

காட்டுல ஒரு கூடாரத்தை போட்டு வச்சிட்டு காசை புடுங்குறானுங்க! விட்டா வனவிலங்குகள் கூட பொழப்பு நடத்த வச்சிருவானுங்க போல!

Sep 13 2021 11:18:00 AM

சாதாரணமான ஹோட்டல்களில் தங்கி உங்களுக்கு போரடித்துவிட்டதை போல உணர்ந்தால் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் இடம் கண்டிப்பாக தேவைப்படும். எஸ்டிஎஃப் ஈகோ லாட்ஜ் நிச்சயம் உங்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரக்கூடிய இடமாகும். இது சாதாரண ஹோட்டல் அறை கிடையாது. அதே சமயம் அதிக சொகுசு அம்சங்களும் இங்கு நிறைந்திருக்காது.

eco-lodge sweden-forest

நீங்கள் எஸ்டிஎஃப் ஈகோ லாட்ஜில் தங்கப் போகிறீர்கள் என்றால், நீங்களே உங்களுக்கு தேவையான விறகுகளை நறுக்கிக் கொள்ள வேண்டும். என்னது இந்த காலத்துல விறகுகளா என்று வாயை பிளக்காதீர்கள். கோடாலி அல்லது மரம் வெட்டுவதற்கு தகுந்த வேறு ஏதேனும் பொருளுடன் நீங்களே விறகுகளை சேகரித்தால் மட்டுமே குளிரிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இது சூடாக இருப்பதற்கும் உங்கள் தினசரி வேலைகளைச் செய்வதற்கும் ஒரு வழியாகும்.

eco-lodge sweden-forest

வித்தியாசமான இடம் வேண்டும் என்று தேடிக் கண்டுபிடித்து வருவதற்கு முன் இதையெல்லாம் யோசிக்க வேண்டும். இந்த வித்தியாசமான ஹோட்டலில் நீங்கள் தேர்வு செய்ய பல அனுபவங்கள் உள்ளன. தியானம், நடைபயணம் மற்றும் குதிரை சவாரி என்று பல புதுவிதமான அனுபவங்களை இங்கு நீங்க அனுபவிக்கலாம்.

eco-lodge sweden-forest

உங்கள் காதலரை இந்த தனிமையான சூழலுக்கு அழைத்துச்சென்று குஷிப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளை இங்கிருக்கும் ட்ரோல் சாகசத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வாய்ப்பு கிடைத்தால் அரிய வனவிலங்குகளைக் கூட இங்கு காணலாம். இந்த இடத்தில் சில சமயம் வெப்பநிலை -20 டிகிரிக்கு கூட செல்லுமாம். இந்த வினோத அனுபவத்தை தரும் ஹோட்டல் ஸ்வீடன் காடுகளுக்குள் அமைந்துள்ளது. உண்மையில் வித்தியாசத்தை தேடும் வினோதமான பிறவிகளுக்காகவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.