#eggs without boiling: தொடர்ந்து 30 நாட்களுக்கு பச்சை முட்டைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? விபரீதம் புரியாமல் விளையாடாதீங்க!
  • 11:40AM Oct 08,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:40AM Oct 08,2019 Tamil Nadu

Unpasteurized பச்சை முட்டைகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கலாம். இருப்பினும், ஒருவர் In shell pasteurization எனப்படும், ஒரு செயல்முறை மூலமாக சுத்தம் செய்யப்பட்ட பச்சை முட்டையை சாப்பிடலாம். பாலுக்கு மட்டும்தான் Pasteurization கேள்விப்பட்டிருப்போம். அது முட்டையிலும் உண்டு.

ஆனால் அதுக்கு நம்ம நாட்டில் வாய்ப்பே இல்லை. ஒரு 5 ரூபாய் முட்டைக்கு, 5000 ரூபாய் யார் செலவு செய்ய போகிறார்கள். Pasteurization மூலம் முட்டையை சுத்தம் செய்ய அதிக செலவு பிடிக்கும். வியாபார ரீதியாக இதனை செய்ய யாரும் இன்றைக்கு தயாராக இல்லை. பச்சையாக சாப்பிட்டாலும் செரிக்கும் அளவுக்கு, அந்த கால மக்களை போல நம் உடல் இல்லை. | Aerobics: நாற்பது வயதில் ஜிம்முக்கு போக கூச்சமா? இருக்கவே இருக்கு ஒரு தாரக மந்திரம்!

பச்சை முட்டைகளை உட்கொள்வதில் பல அபாயங்கள் ஏற்படும். ஏராளமான மக்கள் foodborne என்று சொல்லப்படும் , உணவுப்பழக்க நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் சிலர் ஒவ்வொரு ஆண்டும் அசுத்தமான முட்டைகளை சாப்பிட்டதால் சால்மோனெல்லா என்கிற பாக்டீரிவால் மரணத்தை தழுவுவின்றனர்.

இதெல்லாம் நமக்கு தேவையா.? முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும் என்றால் 10 நிமிடம், அதுவே ஆம்லேட் போட 5 நிமிடம், இப்படி எளிதான வழி இருக்கும் போது, நாம் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும். பால் கூட காய்ச்சி குடித்தால் தான் நல்லது. அதிலும் பல பாக்டீரியாக்களும், நுண்ணுயிரிகளும் இருக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top