புகை பிடிப்பதை நிறுத்தவும், உடலை மீண்டும் வலுவாக்கவும் ஒரு எளிய வழி!!!
  • 10:29AM Sep 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:29AM Sep 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

ரொம்ப நாளாகப் புகை பிடிப்பவரா நீங்கள்!!!  புகை பிடிப்பதை நிறுத்த முடியாமல் தவிக்கும் நபரானால் இதைச் செய்து பாருங்கள். கட்டாயம் சில தினங்களிலேயே முற்றிலுமாக நிறுத்திவிடலாம்.  ஒரு சில நபர்களால் மட்டுமே நினைத்த நேரத்தில் சிகரெட்டை விடவும், மீண்டும் தொடரவும் முடிகிறது.  சிகரெட் பழக்கத்தினை விட நினைத்தால் முதலில் சில செயல்முறைகள் நடக்க வேண்டும். 

அவை – இரத்தத்தில் கலந்துள்ள நிகோடினை அகற்றுவது, நுரையீரலை வலிமையாக்குவது பின்னர் விட்ட பழக்கத்தைத் தொடாமல் இருப்பது.  இன்று விற்கும் மாற்று வழிகள் அனைத்து விலை உயர்ந்ததாகவும், நேரடியாக நிகோடின் பயன்படுத்துவதாகவுமே அமைகின்றன. இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

உலர்ந்த திராட்சை!!!

அதிர்ச்சியடைய வேண்டாம்.  ஒவ்வொரு முறை புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம் ஒன்றோ, இரண்டோ வாயில் போட்டுக் கொண்டு சிறிது சிறிதாக மென்று விழுங்குங்கள். இது புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப் போடுவதுடன், இரத்த ஓட்டத்தையும் சற்றே அதிகரிக்க செய்வதால், புகை பிடிக்காமலே பிடித்தது போன்ற உணர்வு ஏற்படும்.  அது மட்டுமல்ல, பொதுவாக சிகரெட் பிடிப்பவர்கள் அதிகம் பிடிப்பது சாப்பாட்டிற்குப் பின்னும், கழிவறையிலும்தான்.  திராட்சையைத் தோன்றும் போதெல்லாம் சாப்பிடுவதால் நார்ச்சத்து அதிகரித்து காலையில் கழிவறையில் மலச்சிக்கல் உட்பட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போகும்.

 

இரண்டு மூன்று நாட்களில் மலத்தின் நிறம் இயல்பான நிறத்திற்கு வந்து விடும்.  உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டதற்கான முதல் அறிகுறி.  அதன்பின் உலர்ந்த திராட்சையை ஒவ்வொரு நாளிலும் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் வலுப்பெறும், உடலும் பலம் பெறும்.  நிறைய போட்டுக் குடிக்க வேண்டாம். முதல் நாளில் இரண்டு, அடுத்த நாள் இரண்டு எனப் பருகி வந்தாலே ஒரு மாதத்திற்குள்ளாகவே மொத்தமாக அந்தப் பழக்கத்திலிருந்தும், அதன் பாதிப்பிலிருந்தும் வெளி வந்து விடலாம். 

இதைச் செய்யும் நாட்களில் சளிப் பிடிப்பது நல்ல அறிகுறி.  மூன்றாவது, கொஞ்ச நாளைக்கு சிகரெட் பிடிக்கும் நண்பர்களுடன் பழகாமல் இருப்பது. அது உங்கள் கையில்தான் உள்ளது. நினைவில் கொள்ளுங்கள் - வெறும் 8 மணி நேரம் போதும் உடலுக்குத் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள.  அதைப் புரிந்து பாதுகாத்துக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்…    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top