Misc

மழையும் பொழியவில்லை, வெயிலும் அடிக்கவில்லை ஆனால் பூமியில் இருக்கும் அற்புத வானவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Apr 07 2021 10:49:00 AM

கொலம்பியாவில் உலகிலேயே மிகவும் அழகான மற்றும் அதிசயமான நதி ஒன்று அமைந்துள்ளது. இதன் பெயர் கேனோ கிறிஸ்டல்ஸ் ஆகும். இந்த நதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஐந்து நிறங்களில் காட்சியளிக்கும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த நதி இடம்பிடித்துள்ளது.

earth-rainbow

மிகப்பெரிய நதியான இது 100 கிலோமீட்டர் நீளமானது. சில இடங்களில் இதனுடைய அகலம் 20 கிலோமீட்டர் வரையிலும் உள்ளது. இந்த நதி பல்வேறு நிறங்களில் தோன்றுவதற்கு காரணம் இதில் காணப்படும் ஆல்காக்கள் என்று கூறப்படும் ஒருவகை நீர்த்தாவரம். பூமியின் முக்கிய வகை ஆல்காக்கள் இந்த கொலம்பியா நதியில் நன்றாக வளர்கிறது. இதுவே இந்த நதியின் நீரை சிவப்பு, ஊதா, கருப்பு, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய ஐந்து வண்ணங்களில் மிளிரச்செய்கிறது.

earth-rainbow

கடினமான பாதைகளை கடந்து தான் இந்த நதியை அடைய முடியும் என்றாலும் இதை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் தயங்குவதில்லை. இந்த அற்புத தோற்றம் காரணமாக இதை ஐந்து வண்ண நதி மற்றும் நீர் வானவில் என்றும் அழைக்கின்றனர்.