#E-Courts நீதிமன்றத்தின் வழக்கு விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் E-Courts செயலி!
  • 12:17PM May 04,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:17PM May 04,2019 Chennai

இந்தியாவில் நிதித்துறை செயல்படத் தொடங்கியதில் இருந்து இன்று வரை கோடிக்கணக்கான வழக்குகள் பதிவாகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வழக்கின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு நாள் கணக்கில் நீதிமன்றம், வழக்கறிஞர் அலுவலகம் எனச் சென்று வரவேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முதல் மற்ற பழைய வழக்குகளின் வரலாற்று வரை அனைத்தையும் பொதுமக்கள் சுலபமாகத் தெரிந்துகொள்வதற்காக தேசிய தகவல் மையம், E-Courts என்ற செயலியை வெளியிட்டுள்ளனர்.

Image result for E COURTS

நாடு முழுவதும் இயங்கி வரும் 18,000 மாவட்ட நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் மற்றும் 21 உயர் நீதிமன்றங்கள் என அனைத்து நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களையும் இந்த E-Courts செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தச் செயலியை பொதுமக்கள் முதல் கோப்பரே கார்ப்ரேட் நிறுவனங்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வழக்கு விவரங்கள் முதல் சட்ட விவரங்கள் போன்ற அனைத்தையும் எளிய முறையில் கொடுத்துள்ளனர். இந்திய அரசின் விதிக்கு ஏற்றபடி இந்தச் செயலியை வடிவமைத்துள்ளனர். இந்தச் செயலியில் 3.2 கோடிக்கும் அதிகமான வழக்குகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Related image

இந்தச் செயலியின் மூலமாக ஒரு வழக்கின் நிலை, வகை, அடுத்த வாய்தா எப்போது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒரு வழக்கின் விவரத்தை தெரிந்துகொள்ள CNR எண், வழக்கின் நிலை, வழக்கின் காரணம், தேதி போன்றவற்றைச் சரியாகக் கொடுக்கவேண்டும். அதேபோல இந்தச் செயலியை பயன்படுத்தி நீதிமன்ற கட்டணத்தை வழக்கறிஞர்களால் சுலபமாகச் செலுத்தமுடியும். தினமும் 5000 பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதாக தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top