#EBIKEPOLICY: தள்ளாடும் AUTOMOBILE துறை!!! 40 லட்சம் பேரின் வேலைக்கு கல்தாவா???
  • 20:54PM Jun 24,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:54PM Jun 24,2019 Chennai

மத்திய அரசு E-BIKE-களைக் கொண்டு வருவதில் அதீத ஆர்வம் காட்டி வருவது, தற்போதுள்ள AUTOMOBILE தொழிற்சாலைகளான BAJAJ, TVS போன்றவற்றின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக எதிரெதிர் நிறுவனங்களாக இருந்த போதிலும், அரசுக்கு எதிராக COURT-க்கு ஒன்றாகச் செல்ல முடிவெடுத்திருக்கிறார்களாம். காரணம் இல்லாமல் இல்லை. மத்திய அரசு 2023-ல் அனைத்து விதமான மூன்று சக்கர வாகனங்களையும் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாம். அதோடு, 2025-ல் மொத்தமாக 150 CC-க்குள் இருக்கும் இருசக்கர வாகனங்களையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு இந்த நிறுவனங்கள் கோபப்படுவதற்கும் இன்னொரு காரணமும் இருக்கிறது. 2020-ம் ஆண்டில், BHARATH STAGE 6 வாகனங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டதை ஒட்டி, கோடிக்கணக்கில் செலவு செய்து தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள், உதிரிப் பாகங்கள் என்று அனைத்தையும் மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் அதற்கு ஆயுள் காலம் வெறுமனே மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் என்றால், யாருக்குத்தான் கோபம் வராது. போட்ட முதலை திருப்பி எடுக்க முடியாவிட்டால், திவாலாக வேண்டியதுதான்.

இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, AUTOMOBILE துறையிலிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இதுதான் கலக்கம். தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தங்கள் ELECTRIC BIKE-களை இந்தியாவில் விற்பதற்கு ஏற்கெனவே தயாராகிவிட்டன. இங்கோ, கிட்டத்தட்ட AUTOMOBILE துறையே தள்ளாடிக் கீழே விழுந்து விடும் போல. அப்படி நடந்தால், அதை நேரடியாக நம்பியிருக்கும் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் வேலையில்லாமல் தெருவுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். CNG GAS அறிமுகப்படுத்தப்பட்டாலும், பத்து வருடங்களாக இன்னமும் அனைத்து நகரங்களிலும் அதற்கு OUTLET போட முடியாத போது, இந்த E-BIKE-களுக்கு எப்படி தேவையானவற்றைச் செய்து கொடுக்க முடியும் என்றும் கேட்கிறார்கள். நியாயம்தானே!!!

Worlds Safest Bike  |  Revolt RV 400  |  TVS Apache RR 310  |  New Bike Purchase Tips  |  Digicop App  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top