#Asura தீபாவளி வந்தாலே வெடிக்கும் திராவிட போர்! என்ன காரணம்?
  • 19:22PM Oct 27,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:22PM Oct 27,2019 Chennai

பெரும்பாலான ஹிந்து பண்டிகைகள் விஷ்ணு பகவான் அசுரர்களை அழித்ததற்காகவே கொண்டாடப்படுகிறது. எந்த பண்டிகையை எடுத்துக்கொண்டாலும், அதில் நிச்சயம் ஒரு அசுரனை தேவர்களின் வேண்டுதலுக்காக விஷ்ணு பகவான் அழித்ததாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் இந்த விஷயங்கள் புராணங்களாகவும், கடவுள் நம்பிக்கையாகவும் பார்க்கப்பட்டாலும் மறுபக்கம் திராவிட ஆதரவாளர்கள் இதனை அப்போதைய தென்னகத்து மன்னர்களை அரக்கனாக சித்தரித்து வர்ணாசிரமத்தை நிலைநாட்ட ஆரியர்கள் செய்த தந்திரம் என்று கூறுகிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே இன்றைய அரசியலும் நடக்கிறது!

ராமனின் தேசத்தில் உள்ள ராவணன் கோவில்கள்!

Image

முதலில் ஹிந்து மத ஆதரவாளர்கள் கூறுகையில், இது அரசியல் நோக்கத்துடன் சிலர் செய்த சூழ்ச்சி என்றும், மத நம்பிக்கையை அரசியல் படுத்துவது நியாயமில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இதை கேட்கும் திராவிட ஆதரவாளர்கள் அதே மதத்தின் பெயர் வைத்து சிலரை படிக்கவிடாமல் செய்தது மட்டும் நியாயமா என்று கேட்கின்றனர். இப்படி ஆரம்பிக்கும் ஆரியம் மற்றும் திராவிடத்திற்கு எதிரான போராட்டம் தீபாவளி வந்தால் அதிரடியாக வெடிக்க தொடங்குகிறது. ஹிந்து புராணத்தில் கூறப்படும் அசுரர்கள் என்பவர்கள் ஒரு கூட்டத்திற்கு தலைவனாகவும் அல்லது ஒரு இனத்திற்கு மன்னனாகவும் குறிப்பிடப்படுபவர்கள். இவர்கள் அனைவரும் ஈசன் மேல் நல்ல பக்தியும், போர் திறமையும், கல்வி ஞானம் கொண்டவர்களாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவர்கள் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் எதிராக செயல்பட்டதால் விஷ்ணுபகவான் இவர்களை வதம் செய்தார் என்று கூறப்படுகிறது.

இதில் முக்கிய அசுரர்களாக குறிப்பிடப்படுபவர்கள் இராவணன், மஹாபலி, வாலி, நரகாசுரன் மற்றும் மகிஷாசுரன் ஆவர்! இவர்கள் ஐவருமே திராவிட பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் இவர்களை விஷ்ணு அவதாரம் எடுத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சர்யமளிக்கும் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னவென்றால் இறைவனான விஷ்ணுவே இந்த அசுரர்களின் திறமைகளுக்கு முன் சூழ்ச்சி செய்து வென்றுள்ளார், அதேபோல இந்த மன்னர்கள் ஆண்ட பகுதிகள் செழிப்புற்றும், செல்வவளம் கொண்டுமிருந்ததாக கூறப்படுகிறது. இன்றும்கூட ஓணம் பண்டிகையை நாம் அதற்கு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். இப்படி மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுத்தவர்களை ஏன் அசுரர்கள் என்று அழைக்க வேண்டும்? திராவிட பகுதிகளை ஆண்ட மன்னர்களை இவர்கள் அசுரர்கள் என்று அழைப்பதற்கு சமமாகவே இது உள்ளது, அதேபோல திராவிட மன்னர்கள் இறந்த தினத்தை இவர்கள் கொண்டாடுவது எந்த விதத்தில் சரியாகும்? என்றே திராவிட ஆதரவாளர்கள் கேட்கின்றனர். இந்த கேள்வியே தீபாவளி தினம் வந்தால் கொண்டாட்டங்களை கடந்து கருத்தியல் வெடியை கொளுத்திப்போடும் தினமாக மாறிவிடுகிறது! இன்றும்கூட சில திராவிட ஆதரவாளர்கள் இதனை கேள்வியாக கேட்டு சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top