Exquisite

போகிற போக்கை பார்த்தால் இனி ஆண்களை வைத்துக் கொள்வார்களா என்று தெரியவில்லையே!

Apr 04 2021 09:56:00 PM

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க உதவியாக இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு அசத்தலான வேலைகளை செய்யும் திறன் மிக்கதாக இருக்கிறது.

drone-weight-lifting

பொருட்களை வீடுகளுக்கு டோர் டெலிவெரி செய்வதற்கு ட்ரோன்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும். ஆனால் இதிலிருக்கும் சிக்கல் என்னவென்றால் ட்ரோன்கள் எடை குறைவான பொருட்களையே தூக்கி செல்ல முடியும். அதிக எடை சுமக்கும் விதத்தில் ட்ரோன்களை தயார் செய்து வருகிறார்கள் ஜார்ஜியா தொழில்நுட்ப விஞ்ஞானிகள். ஒரு பெட்டியை சுற்றி 4 ட்ரோன்களை பொருத்தி அதை தூக்கிக்கொண்டு செல்வதை சோதனை செய்து பார்த்துள்ளனர்.

drone-weight-lifting

அந்த சோதனை வெற்றியடைந்துள்ளது. ட்ரோன்களுக்கு நடுவில் இருக்கும் பெட்டியில் 5.4 கிலோ எடையுள்ள பொருட்களை வைக்க முடியும். இதை நான்கு ட்ரோன்களும் ஒரே நேரத்தில் தூக்கிக்கொண்டு பறந்து சென்று வீடுகளுக்கு டெலிவரி செய்ய முடியும். டெலிவரி செய்யும் சரக்கின் எடையை பொறுத்து தேவைப்பட்டால் மேலும் ஒன்றிரண்டு ட்ரோன்களை கூட இதில் இணைத்து கொள்ளும் வசதி இருக்கிறது. அமெரிக்காவில் சோதனை அடிப்படையில் இருக்கும் ட்ரோன் டெலிவெரி சேவை விரைவில் உலகம் முழுவதும் வந்து விடும் என்று தோன்றுகிறது.