#JoeWhale சார், இதையா பிரச்சனை சொன்னிங்க! திறமை சார்!!! 9 வயது சிறுவனின் அசத்தல் திறமை!
  • 22:13PM Nov 05,2019 United Kingdom
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 22:13PM Nov 05,2019 United Kingdom

பொதுவாகக் குழந்தைகளின் திறனை சிறுவயதிலேயே கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியைக் கொடுப்பது மிகமுக்கியமாகும். காரணம் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அது உந்துகோலாக அமையும். அந்த விதத்தில் இந்த 9 வயது சிறுவன் Joe Whale-ன் பெற்றோரை பாராட்ட வேண்டும். இன்று இவன் உலகளவில் ட்ரெண்டாகி வருவதற்கு முக்கியக் காரணம் இவனது பெற்றோர் தான்.

பிறக்கும் போதே சில குழந்தைகள் ஒருவித திறனுடன் பிறகும். அவர்கள் வளரும்போதே அந்தத் திறனை கண்டறிவது அவசியம். Joe Whale-ன் திறனை அவனின் பெற்றோர்கள் கண்டுபிடித்ததுகூட ஒரு சுவாரஸ்யமான விஷயத்தில் தான். நாம் அனைவர்க்கும் நோட்டுப்புத்தகத்தின் பின் எதையாவது கிறுக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். Joe-வுக்கும் அதே பழக்கம் தான், ஆனால் நோட்டுப்புத்தகம் முழுவதும் கிறுக்குவான். இதனைப் பார்த்த அவனது ஆசிரியர், Joe-வின் பெற்றோரை அழைத்து இதுபற்றிக் குறை கூறியுள்ளனர். ஆனால் அவனது பெற்றோருக்கு அது குறையாகத் தெரியவில்லை, அவனது திறனாகத் தெரிந்துள்ளது! Joe-வின் பெற்றோர் அவனை உடனே Drawing Class-ல் சேர்த்தனர்.

இப்படிருக்கத் தினமும் பள்ளியில் Joe வரைவதை பார்த்த அவனது ஆசிரியர் ஒருவர், அதனைப் புகைப்படம் எடுத்து, தனது மாணவன் சிறப்பாக Doodle வரைவதாகப் பதிவிட்டார். இது இங்கிலாந்து முழக்க வைரலானது. இந்தச் சிறுவன் சிறப்பாக Doodle வரைவதை பார்த்த Number 4 ஹோட்டலை சேர்ந்தவர்கள், அவர்களின் ஹோட்டல் சுவரில் Doodle வரைய அழைத்துள்ளனர். அந்த அழைப்பை ஏற்று Joe அந்த ஹோட்டலுக்குச் சென்று சுமார் 12 மணிநேரத்தில் சுவர் முழுக்க Doodle வரைந்து முடித்தான். இவனது திறமை அந்தப் பகுதி முழுக்கப் பிரபலமாகியது. இங்கிலாந்தை சேர்ந்த பலர் இந்தச் சிறுவனை DoodleBoy என்றே அழைக்கின்றனர். இதுகுறித்து அவனது தந்தை Gregory கூறுகையில், பெற்றோர் குழந்தைகளின் திறனை அறிந்து, அதை அவன் வளர்த்துக்கொள்ள அனைத்தையும் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top