Misc

தான தர்மங்கள் எல்லா நேரத்திலும் உங்களுக்கு புண்ணியத்தை தருமென்று கனவு காண வேண்டாம்! விதியிடம் இருந்து உங்களால் தப்பிக்க முடியுமா என்ன?

Jul 29 2021 12:28:00 PM

தானம் செய்வது ஒரு சிலருக்கு மிகவும் பிடித்தமான செயலாகவும் பலருக்கு பிடிக்காத ஒன்றாகவும் இருக்கிறது. தங்களை விட வசதியில் குறைந்தவர்கள், வயதான பெரியவர்கள் மற்றும் யாசகம் கேட்பவர்களுக்கெல்லாம் தானம் செய்வதை ஒரு சிலர் நன்மையாக கருதி செய்து வருகின்றனர். காலத்திற்கு தகுந்தாற்போல தற்போது பிறருக்கு உதவ பல நவீன வசதிகளும் கூட இருக்கிறது. நாம் ஒரு சில பொருட்களை தான தர்மம் செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த பொருள்களை நீங்கள் தானம் செய்ய நேர்ந்தால் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பல கஷ்டங்களை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்தெந்த பொருள்களை பிறருக்கு தானமாக கொடுக்கக் கூடாது என்று இன்று நாம் அனைவரும் தெரிந்து கொள்வோம்.

donation-facts

நம் வீட்டில் இருக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று துடைப்பம். இதெல்லாம் முக்கியமான பொருளா என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். துடைப்பத்தை இன்னொருவருக்கு தானமாக வழங்குவது நம் வீட்டு மகாலட்சுமியை பிறருக்கு வழங்குவதற்கு சமமாகும். துடைப்பத்தை நீங்கள் தானம் செய்தால் வீட்டில் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். எனவே எந்தக் காலத்திலும் துடைப்பத்தை தானமாக வழங்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

donation-facts

தர்மம் தலை காக்கும் என்பது உண்மை என்றாலும் ஆடைகள் விஷயத்தில் அது அந்த அளவுக்கு பொருந்துவதில்லை. அழுக்கு அல்லது கிழிந்த உடைகள், திருமண உடைகள், கறை படிந்த உடைகள் ஆகியவற்றை மற்றவருக்கு தானமாக கொடுப்பதால் நம்மிடம் துரதிர்ஷ்டம் தொற்றிக்கொள்ளும். அதே மாதிரி உடைந்த பொருட்களை தானம் செய்வதும் தவறானதாகும்.

donation-facts

கத்தி, ஊசி, கத்திரி கோல் போன்ற கூர்மையான பொருட்களை ஒருவருக்கு தானம் செய்தால் உங்களுடைய வீட்டுக்கு தீராத சாபக்கேடு வந்து விடும். எனவே கூர்மையான பொருட்களை யாருக்கும் தானம் செய்ய வேண்டாம் நண்பர்களே.

donation-facts

அழுக்கு அல்லது கிழிந்த உடைகளை போல கிழிந்த காலணிகளை இன்னொருவருக்கு தானமாக கொடுத்து விடாதீர்கள். இதனால் பல தீமைகள் நமக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. தானம் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் புதிதாக உடைகள் அல்லது காலணிகளை வாங்கி வறியவருக்கு கொடுங்கள். நீங்கள் பயன்படுத்திய உபயோகமற்ற பொருட்களை தானமாக கொடுப்பதை இன்றுடன் நிறுத்துங்கள்.

donation-facts

தானமாக வழங்கும் பொருட்களில் நெகிழி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் மண் வளத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் நம்முடைய வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும். இது தவிர காலாவதியான மருந்து, உடைந்த பாத்திரங்கள், எழுதி முடித்து தீர்ந்து போன நோட்டு புத்தகங்கள் ஆகியவை கூட பிறருக்கு தானமாக கொடுக்கக் கூடாத பொருட்களாகும். தானம் கொடுப்பது ஒரு புண்ணிய காரியமாக இருந்தாலும் நாம் எதை தானமாக வழங்குகிறோம் என்பது மிகவும் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.