Highrise

நீங்க என்னப்பா ஓடுறீங்க ? நம்ம ஆளு பாருங்க சும்மா கில்லி மாதிரி புகுந்து விளையாடி கலக்கியிருக்காரு !

May 02 2021 06:40:00 PM

சமீப காலமாக விலங்குகளும் மனிதர்களை மிஞ்சும் வகையில் சேட்டைகள் செய்ய ஆரம்பித்து விட்டன. அதிலும் நாய்கள் தான் எல்லாத்திலுமே டாப். நாய்கள் எப்போதும் நம்மை ஒரு விஷயத்தை செய்ய விடாமல் நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மனிதர்களின் மிகவும் விரும்பத்தக்க செல்லப்பிராணியாக நாய்கள் இருக்கிறது.

running-dog

அமெரிக்காவின் உட்டா என்னும் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் ட்ராக்கில் ரிலே என்று சொல்லப்படும் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தனர். அந்த பந்தயத்தில் கிரேசி லானி என்பவர் வெற்றி இலக்கை அடைய வேகமாக ஓடிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஹோலி என்ற நாய் ஒன்று களத்தில் இறங்கி போட்டியார்களுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்தது.

running-dog

கடைசியில் மின்னல் வேகத்தில் சென்ற அந்த நாய் வெற்றி கோட்டிற்கு அருகில் சென்றுகொண்டிருந்த கிரேசி லானியையும் தாண்டி வேகமாக ஓடி வெற்றி இலக்கை தாண்டியது. இந்த எதிர்பாராத செயலால் அங்கு குழுமியிருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். நாயின் சேட்டையை கண்டு ஆரவாரத்துடன் கைதட்டி பாராட்டினர். கிரேசி லானி மற்றும் அவரது குழுவினரே வெற்றியடைந்திருந்தாலும் அதை மறக்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஹோலி என்ற நாய் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறினாலும் தப்பில்லை. இந்த பந்தயத்தின் வீடியோ தற்போது வெளியாகி பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை பார்க்கும் அனைவரும் அந்த நாய்க்கு பலத்த கரகோஷங்களை எழுப்பி வருகின்றனர்.