Rainforest

யோவ் இதென்ன நாயா இல்ல சிங்கமா? இவ்வளவு பெருசா இருக்கே இதையெல்லாம் எப்படி சோறு போட்டு வளர்த்துவது?

Jun 11 2021 06:26:00 PM

நாய்கள் மனிதர்களிடத்தில் எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய விலங்குகளாக இருந்து வருகிறது. நன்றி மறவாத பிராணியாக இருக்கும் நாய்கள் பெரும்பாலும் வீட்டுக்காவலுக்கு மனிதர்களால் உபயோகிக்கப்படுகின்றன. நாய்களில் பல வகை உள்ளது. பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாய் சிங்கத்தை போன்ற தோற்றத்தை கொண்ட ஒரு வகை நாயை பற்றித்தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

brazillian-dog

Brazilian Mastiff என்ற வகை நாய் தான் அது. இந்த நாயின் தாயகம் பிரேசில் ஆகும். மற்ற நாய்களை காட்டிலும் மிகவும் கூர்மையான மோப்பசக்தியும், தீவிரமான தாக்கும் மனப்பான்மையும் கொண்டது இந்த நாய். இதனிடம் தயவுதாட்சனை எல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. இந்த நாயின் உடலமைப்பே மனிதர்களை பீதியடைய செய்யும் அளவுக்கு இருக்கிறது.

brazillian-dog

இதனுடைய நாக்கு மாட்டும் ஒரு அடி நீளத்துக்கு தொங்கும். 2.5 அடி உயரம் வரை வளரும் இந்த நாய்கள் 100 பவுண்ட் எடை கொண்டுள்ளது. மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் இந்த நாயை பயிற்சியின் போது கவனித்துக்கொள்வதே மிகப்பெரும் சவாலாக இருக்கும். யாராவது அடையாளம் தெரியாத நபர் இந்த நாயிடம் சிக்கிக்கொண்டால் அவரை காப்பாற்றுவது மிகக்கடினம். இந்த நாயின் மூர்க்கத்தனத்தால் ஜப்பான் நாட்டில் இந்த நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

brazillian-dog