பெண்களுக்கு எப்பொழுது சுதந்திரம் ??
  • 09:54AM Oct 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 09:54AM Oct 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

 இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் சிறு குழந்தையைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்லும்..காரணம் குழந்தையையும் சிலர் தவறான பார்வையில் பார்க்கிறார்கள்..இன்றும் ஒரு சில மாநிலத்தில் பெண்கள் படும் அவஸ்தை தட்டி கேட்கப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை..!!

சந்தோஷமாக இருக்கும் பெண்ணிடம் இன்று ஒரு நாள் உங்களுக்கு நாள் எப்படிப் போனது என்று கேட்டால்..ஏதோ போனது என்று கூறுவார்கள்..நன்றாக அழுத்திக் கேட்டால் "காலைல இருந்து வேளைக்கு வந்து போறதுக்குள்ள ஏங்க நிம்மதியா போகமுடியுது" என்று நாட்டில் உள்ள பாதிப் பெண்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்ட தொடங்குவார்கள்.! அப்படிச் சொல்லப்பட்ட சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும்  9 அவஸ்தைகள் தினமும் பெண்கள் சமாளிப்பதை பற்றிப் பார்ப்போம்....

1.ஒரு நாளைக்கு ஆண்கள் 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றால் பெண்கள் 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்..8 மணிநேரம் அலுவலக வேலை பார்க்கவேண்டும் என்றால், இன்னொரு 8 மணிநேரம் குடும்ப வேலைகள் பார்க்கவேண்டும்..

 

2.ஒரு பெண் வேலைக்குச் சென்று வருவதற்குள் பல இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.,ஒரு சிலர் பேருந்துகளில் தெரியாமல் இடிக்கிறார்கள் என்றால்,பலர் என்ன எண்ணத்தில் பக்கத்தில் நிற்கிறார்கள் என்று கணிக்க முடியவில்லை.! பைக் ஓட்டிக்கொண்டு வருபவர்கள் கூட பெண்களை இடிப்பதுபோல் வந்து செல்வர்கள்.!

 

3.ஒரு பெண் ஹோட்டலில் தனியாகச் சாப்பிட சென்றால் கூட நிம்மதியாகச் சாப்பிடமுடியவில்லை...பலர் கண்ணோட்டம் வேறுவகையாக உள்ளது.! இரவில் ஒரு பெண் தனியாக வருவது இன்றும் சவாலாகவே உள்ளது!!

 

4.பெண்கள் சிலர் பொது இடங்களில் அணியும் உடை சரி இல்லை என்று பலர் கூறுகின்றனர்..தவறு பெண்கள் உடையிலா இல்லை கூறுபவர்கள் பார்வையிலா என்று தெரியவில்லை! ஒரு பெண் தெருவில் செல்லும் பொழுது  ஒருஒரு ஆணின் பார்வையிலும் அந்தப் பெண் கற்பழிக்கப்படுகிறாள்..

5.வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமடைந்து வருகிறது..உடன் வேலை செய்யும் ஒரு ஒருவரும் அவளைத் தோழியாக பார்க்கிறார்கள் என்று பார்த்தால்.,அவர்களைச் சமாளிக்கும் அந்தப் பெண்ணிற்கு மட்டும் தான் தெரியும் அந்த பிரச்சினைகள்.!!

6.மிகமுக்கியமாகப் பெண்கள் படும் இன்னொரு  பிரச்சனை இந்தக் காதல் பிரச்சினைகள் தான்...அந்தப் பெண்  யார் என்று தெரியாமல் காதல் தொல்லைகள் கொடுப்பது,பின் அவள்  காதலை ஏற்க வில்லை என்றால்,அந்தப் பெண்ணின் முகத்தில் அசிட் அடிப்பது,கொலைமிரட்டல் விடுவது போன்ற பயங்கரங்கள் இன்றும் நடைபெறுகிறது.!

7.இதை விடப் பெரிய கொடுமைகள் என்னவென்றால் இளம் பெண்களும்,பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகள்.!சில அயோக்கியர்கள் குழந்தைகள் என்று கூட பாராமல் கீழ்த்தனமாக நடந்து கொள்கிறார்கள்!!

8.இன்றும் பல இடங்களில் ஈவ் டீசிங்,அநாகரிகம் பெண்களை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.!பல பெண்கள் இந்த கோரச்செயல்களில் சிக்கி,இதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.!

9.இது அனைத்தும் நமக்குத் தெரிந்து பார்ப்பது என்று இருந்தாலும்,இதை விட மோசமான கொடுமைகள் விளையாட்டு துறையில் இருக்கும் பெண்கள்படும் அவஸ்தைகள்.! படங்கள் பலவற்றில்  நாம் பார்த்தாலும் உண்மையில் நடப்பது என்னவென்று அந்தக் கொடுமைகளை சந்திக்கும் பெண்களுக்கே தெரியும்.!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top