சிவம் படைப்பாற்றலை அதிகரிக்குமா???
  • 12:20PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:20PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ பக்தக் கட்டுரைன்னு நினைக்கிறவங்க தயவு செய்து இதை படிக்காதீங்க.  ஆன்மீகவாதிகள் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம், ஏன்னா, இந்தப் பெயரை நான் வைக்கல… என்னோட நண்பர்கள் சிலர் இதைப் பற்றி சிலாகித்து பேசுறப்போ அவங்க சொன்ன வார்த்தை இது.  எனக்குத் தெரிஞ்சு, சென்னைல நிறையப் பேரு இதைப் பத்தி பேசும்போது இந்த வார்த்தை உபயோகப்படுத்தியிருக்காங்க.  மத்தபடி நெல்லை, மதுரை, தூத்துகுடி, திண்டுக்கல் இங்கயெல்லாம் இதோட பேரு என்னன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. பில்டப் ஓவர் மேட்டருக்கு வாடின்னு சொல்றீங்களா, ரைட் ஓகே. சிவம்னு பொதுவா குறிப்பிடுறது கஞ்சாவை.

நான் பொதுவா எழுத்துத் துறைல இருக்கிறதால, கூட இருந்தவங்க என்னையே சந்தேகமாக் கூட பார்த்திருக்காங்க.  செமையா சீன் சொல்லி முடிச்சா, என்ன காலங்கார்த்தாலயேவான்னு ஆரம்பிச்சுடுவாங்க.  க்ரியேட்டிவ் துறைகள்ல இருக்கிற நிறைய பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது போகப் போகத்தான் தெரிஞ்சது.  அதுக்கு ஒரு சித்தர் (உண்மையான சித்தர் இல்லை!!!) சொன்ன காரணம், ஒரு விஷயத்துக்குள்ள நல்லா டீப்பா உள்ள போக முடியும்.  எல்லாக் கோணங்களும் தெளிவா விரிவடையும்னு சொன்னாரு.  கடைசில, எனக்குத் தெரிஞ்சு அந்த சித்தர் டீப்பா போன ஒரு விஷயம் என்னன்னு நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்லைன்னு நினைக்கிறேன்.

அப்புறம் வீரியம் ஜாஸ்தியாகும், மருத்துவ குணங்கள் இருக்கு (இருக்கலாம், எனக்கு உடம்பு சரியில்லாதப்போ பார்த்துக்கலாம்… நல்லா இருக்கிறவனுக்கு எதுக்கு மருந்து???) இப்படியெல்லாம் நிறைய கேன்வாஸ்.  உண்மையிலேயே படைப்பாற்றலை அதிகப்படுத்துமான்னு என்கிட்ட கேட்டா, இல்லைன்னுதான் சொல்வேன்.  எனக்குத் தெரிஞ்சு படைப்பாற்றலை அதிகப்படுத்துறது ரெண்டுதான், ஒண்ணு வயித்துப்பசி, இன்னொன்னு அறிவுப்பசி.  மூளையைத் தூண்டுதல் போன்ற சில சமாச்சாரங்கள் ஆரம்பிக்கும்போது பயன் தர்ற மாதிரித் தெரிஞ்சாலும், உண்மையிலேயே நாளடைவில் நம்மை அடிமையாக்கி விடும்.  ஒரு ப்ரெட்யூசர் அப்பாயிண்ட்மென்ட் முக்கியமா, அல்லது சிவத்தை இழுப்பது முக்கியமான்னு கேட்டா நிறையப் பேரு நாளைக்கு சாரி சொல்லிக்கலாம், இப்போ இதை முடிச்சிடலாம்னு உட்கார்ந்துடுவாங்க.

என்ன காரணத்தால இதுக்கு இந்தப் பேரு வந்துச்சுன்னு தெரியலை, ஆனா, கண்டிப்பா சிவம் யாரையும் புத்திசாலியாக்கப் போறதில்லை.  ஏன்னா, தலைகீழா நின்னாலும் க்ரியேட்டிவிட்டி மட்டும் பொறப்புல இருந்தே வரனும்.  க்ரியேட்டிவிட்டி இருக்கிறதாலதான் நாம எல்லாரும் இந்த துறைல இத்தனை நாள் இருந்திருக்கோம்.  இது புரியாம வாழ்க்கையையும், இளமையையும் தொலைத்து அடிமைகளாய் வாழும் அத்தனை ஜீவன்களுக்கும் என் ஆழ்ந்த பரிதாபங்கள்.  இப்போ எதுக்கு இந்தக் கட்டுரைன்னு கேக்குறீங்களா??? என்கிட்ட சொன்ன மாதிரியே இன்னைக்கு எவனாச்சும், எவன்கிட்டயாச்சும் – ட்ரை பண்ணிப் பாரு மாப்புள ன்னு மப்புல பினாத்திட்டிருப்பான் இல்லை.  அவன்கிட்டயிருந்து அவனைக் காப்பாத்தத்தான்… வேற என்ன பன்றது…     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top