#property: நிலம் வாங்கும் போது இது போன்ற வில்லங்கம் உள்ளதா என்பதை உஷாராக சரிபார்த்து வாங்கவும்! நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை?
  • 21:05PM Oct 12,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:05PM Oct 12,2019 Chennai

என்னதான் விவரமாக நிலம் வாங்கினாலும் ஏதோ ஒரு வில்லங்கம் வந்துவிடும்.  நிலம் வாங்கி பட்டா போடுவதற்குள் அலைச்சல், பாதி ஆயுளை குறைத்துவிடும். அதனாலே கல்யாணம் செய்துபார் வீடுகட்டிப்பார் என்கிறார்கள்.  நிலம் அல்லது வீடு வாங்கும் முன் ஏமாறாமல் இருக்க ஒரு சில வழிமுறைகள், 

#1. சொத்து பத்திரங்கள் மூலம் குறைந்தது 50 வருடங்களாக சொத்து யார் யார் கைவசம் இருந்தது என பார்த்து   சட்ட ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

#2. முன்னரெல்லாம் ரிஜிஸ்டர் ஆகாத உயில் மூலம் வரும் சொத்துக்கள் ஏராளமாக இருக்கும். அந்த உயில்  தொடர்பான  நபரின் உடன் பிறந்தோர் எப்போது வேண்டுமானாலும் வந்து இந்த சொத்துகளில் பங்கு உள்ளது என சட்டத்தை நாடலாம். இதனால் பிற்காலங்களில் பேங்குகளில்  சென்று வீடு கட்ட லோன் வாங்குவதில் சிரமம் ஏற்படும்.

#3. ஒரே சொத்தை இருவருக்கு விற்பதும் உண்டு,அந்த சமயங்களில்  வில்லங்க சர்டிபிகேட் ஐம்பது வருடங்களுக்கு வாங்கிப் பார்ப்பதும் நலம்.   இதை தவிர்த்து வாரிசு சர்டிபிகேட், டெத் சர்டிபிகேட் போன்றவை சம்பந்த பட்டிருந்தாலும் அதை கேட்டு வாங்கி சரிபார்த்து கொள்வது சிறப்பு.

#4. பல லட்சங்களைப் போட்டு சொத்துகள் வாங்குபவர்கள்  சில ஆயிரங்களை கொடுத்து வக்கீல்களிடம் சரியான ஆலோசனை பெற மறந்துவிடுகின்றனர்.  பிற்காலத்தில் பிரச்சனைகள் இன்றி நிம்மதியாய் இருக்க இது சரியான வழிமுறையாகும்..

#5. முதலில் வாங்கும் நிலம் பட்டாவா அல்லது புறம்போக்கா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் இது அடிப்படையான ஒன்று.  தற்போது அனைத்து பட்டா நிலங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருப்பதால் நீங்களே கணினி மூலமே  சரிபார்த்து கொள்ளவும்.

#6.  நிலம் நன்செய்,புன்செய் அல்லது மானாவாரி போன்ற எந்த வகைப்பாட்டில் வரும் என்பது சுருக்கமாக குறிப்பிடபட்டிருக்கும் அதை  ஒருமுறை கவனித்து கொள்ளவும். 

 #property, நில எடுப்பு நடவடிக்கை நிலுவையில் இருந்தாலும் சிக்கல் தான்.இதனையடுத்து நிலம் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கிறதா? மனை வாங்குகிறீர்கள் என்றால் அது உரிய அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதா? பத்திரத்தில் அளவீடுகள் சரியாக உள்ளதா? இது போன்ற அடிப்படைகளையும் சரியாக விசாரித்து கொள்வது கண்ணுக்கு  தெரியாமல் கிளம்பும் வம்புகளை தவிர்க்கும்.#LoadBearing: புதிதாக வீடுகட்டும்போது கவனிக்க தவறுபவை! மறக்காம உங்க எஞ்சினியர்கிட்ட இதெல்லாம் கேளுங்க!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top