Lushgreen

சிவகார்த்திகேயன் படத்துடன் மோதி மூக்கை உடைத்துக் கொண்ட விஜய் சேதுபதி! டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவங்க தான் காரணம்!

Oct 12 2021 01:24:00 PM

கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படமும், விஜய் சேதுபதி நடிப்பில் முகிழ் படமும் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகின. ரொம்ப நாட்களககவே விஜய் சேதுபதி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். எப்படியும் இந்த படம் தனக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என்று நினைத்து தன்னுடைய போட்டி நடிகரான சிவகார்த்திகேயன் படத்துடன் முகிழ் படத்தை வெளியிட்டார்.

doctor thalapathy mugil release thalapathyfans

சிவகார்த்திகேயனும் கடந்த சில வருடங்களாக ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார். இந்த படம் ஜெயித்தால் தான் தமிழ் சினிமாவில் கால் ஊன்ற முடியும் என்னும் நிலைக்கு சிவா தள்ளப்பட்டுவிட்டார். எனவே டாக்டர் படத்தை நேரடியாக திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார். அதே போலவே படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு டாக்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டும் அடித்து விட்டது.

doctor thalapathy mugil release thalapathyfans

எல்லோரும் இந்த படம் ஆக்சன் படமாக இருக்கும் என்று நினைத்தபோது படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைந்து எல்லோரையும் கவர்ந்துள்ளது. முகிழ் படம் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் என்பதால் யாரையும் பெரிதாக கவரவில்லை. ஏதோ ஒரே வீட்டுக்குள் சின்ன பட்ஜெட்டில் எடுத்த மாதிரி முகிழ் படம் உள்ளது என ரசிகர்கள் முகிழ் படம் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

doctor thalapathy mugil release thalapathyfans

டாக்டர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் விஜய் ரசிகர்கள் தான். டாக்டர் படத்தை எடுத்த நெல்சன் திலீப்குமார் தான் அடுத்து விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை எடுத்து வருகிறார். டாக்டர் படம் எப்படி இருக்கு என்று தெரிந்தால் தான் பீஸ்ட் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். எனவே சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்ற செய்தி எல்லா இடங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. எது எப்படியோ டாக்டர், கோலமாவு கோகிலா படங்களை போலவே பீஸ்ட் படமும் இருந்துவிட்டால் அஜித் ரசிகர்களிடம் இருந்து விஜய் ரசிகர்கள் தப்பித்து கொள்வார்கள்.

doctor thalapathy mugil release thalapathyfans