#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்!
  • 12:44PM Jul 10,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:44PM Jul 10,2019 Chennai

கடந்த 5-ம் தேதி பாராளுமன்றத்தில் 2019-20 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர் வரி வசூல் மற்றும் வரி விதிப்பு முறை குறித்துப் புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய பாடலை மேற்கோள் காட்டி பேசினார். இவர் தமிழில் மேற்கோள் காட்டி பேசியது மக்களவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் கவிஞர்கள் பலரை கொண்ட எதிர்க்கட்சி எம்பிகளான திமுக அமைச்சர்கள் புறநானூறு பாடலை சரியாகப் படித்ததற்குப் பாராட்டுகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதம் லோக் சபாவில் நடந்தது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா, வரி விதிப்பு முறை மற்றும் வரி வசூல் முறை பற்றி மேற்கோள் காட்டி பேசிய நிதி அமைச்சருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தப் பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன், வரி வசூல் முறை குறித்து அந்தப் பாடலில் கூறப்பட்டிருப்பது சரி தான், ஆனால் எங்கள் கவலை வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்துதான் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நிதியமைச்சர் மேற்கோள் காட்டியது போல அவருக்கு நான் திருக்குறளில் இருந்து ஒரு குரலை மேற்கோள் காட்ட விரும்புகிறேன் என்று கூறி, "ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" என்ற திருக்குறளை கூறினார். இதன் அர்த்தம், ஒரு மன்னன், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் போன்ற நான்கையும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் முற்றிலும் தோற்றுவிட்டது என்று கூறி நிதியமைச்சரின் பட்ஜெட் தாக்களை விமரிசித்துப் புறநானூற்றுக்குத் திருக்குறளை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்தார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top