#Alcoholic: குடிப்பழக்கத்தால் பட வாய்ப்புகளை இழந்த இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்!!!
  • 15:30PM Dec 06,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 15:30PM Dec 06,2019 Tamil Nadu

கடந்த 1998ம் ஆண்டு நடிகர் முரளி  சுவலட்சுமி ஆகியோர் நடிக்க இயக்குனர் நாகராஜின் இயக்கத்தில்  வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற  படம் தினந்தோறும்.அன்றிலிருந்து  இவரை தினந்தோறும் நாகராஜ் என்று தான் திரையுலகில் எல்லோரும் அழைப்பர். நல்ல திறமைசாலியான நாகராஜ் தினந்தோறும் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். எந்நேரமும் குடித்துக்கொண்டே இருந்ததால் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை.

naga raj.jpg

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் தினந்தோறும் நாகராஜ் தான், அதில் மின்னலே, காக்க காக்க உள்பட பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது  .மேலும் தமிழ் திரையுலகில்  பல முன்னணி இயக்குனர்களின் படங்களில், கதை விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டு திரையில் கொண்டு வரவேண்டிய ஒரு காட்சியை  சொல்வதையே தனது பணியாக மாற்றிக்கொண்ட நாகராஜ், குடிப்பதையே முழுநேர வேலையாக செய்துவந்தார். இதனால் அவரை நம்பி பட வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை

nagaraj.jpg.

இந்த சூழ்நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்கு  சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் தினந்தோறும்  நாகராஜ், தனது மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் தான் இமாலய தளபதி விஜய்அவர்களின்  படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவதுஇளைய தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்  3 மணி நேரம் கதை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டது. மறுநாள் ஒப்பந்தம் போடுவதாக இருந்தது. ஆனால் தான்  எப்பொழுதும் போல குடித்துவிட்டு அவரது அலுவலகம் சென்றேன். அது அவருக்கு  பிடிக்கவில்லை.  அதனால் விஜய் பட வாய்ப்பை இழந்தேன் , என தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு மனதளவில் குடியை விட முயற்சிகள் மேற்கொண்டு தற்புழுது 6 ஆண்டுகளாக அந்த பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டதாக மகிழ்ச்சியுடன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார், அதனால் தற்பொழுது  அவரை நம்பி படங்களைஇயக்கும் வாய்ப்பு  தர தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கின்றனர்.  புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் தினந்தோறும் நாகராஜ்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top