Rainforest

#Rajini: ரஜினி படிச்ச ஸ்கூல்ல இவரு தான் ஹெட்மாஸ்டர் - தமிழ் சினிமாவின் பீஷ்மரின் தரமான 5 படங்கள்.!

Jul 11 2019 06:01:00 PM

தமிழ் சினிமாவின் பீஷ்மராக விளங்கும் இயக்குநர் பாலச்சந்தர் தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர். கைலாசம் பாலச்சந்தரான இவர் கே பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார். ரஜினியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர். அதே போல கமலஹாசனை கதாநாயகனாக்கி பார்த்தவர். நாடகத்தில் இருந்து சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து பல வெற்றிகளை குவித்தவர். 80களில் அவர் இயக்கத்தில் வெளிவந்த தரமான 5 படங்களை பற்றி அடுத்து பார்க்கலாம்.

#1. மூன்று முடிச்சு(1976) : ஒரு பெண் தனக்கு பிடிக்காத தன்னை வலுக்கட்டாயமாக அபகரிக்க ஆசைப்படும் ஆண்-னிடம் இருந்து தன்னை தற்காத்து கொண்டு அந்த கயவனுக்கு பாடம் புகட்ட எந்த எல்லைக்கும் செல்வாள் என்ற வித்தியாசமான கதையை மிக துணிச்சலாக இயக்குனர் சிகரம் கே பி இயக்கியிருப்பார்.

#2. வறுமையின் நிறம் சிவப்பு (1980): வேலை இல்லா பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கையில் படும் கஷ்டம், வறுமை, அவமானம் போன்றவற்றை திரையில் காட்டி இறுதியில் அவர்களுக்கான சிறந்த அறிவுரையை சொல்லிய பாடம்.

#3. புன்னகை மன்னன்(1986): காதல் தோல்விக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்ற கருத்தை வலியுறுத்திய திரைப்படம்.

#4. உன்னால் முடியும் தம்பி(1988): படத்தின் நாயகன் உயர்வு தாழ்வு பார்க்காமல் அடுத்தவர் துன்பத்தை கண்டு துடிப்பவர் ஆனால் தந்தை சாதிப்பற்று உள்ள சங்கீத வித்வான்.இவர்களுக்கான முரண்பாடு,போட்டி என படம் பார்த்த பலருக்கு சவுக்கடி கொடுத்த படம். குடி எப்படி சமுதாயத்தை சீரழிகிறது என்றும் சிறப்பாக சொல்லியிருப்பார் இயக்குனர்.

#5. புது புது அர்த்தங்கள்(1989): ஒரு பிரபலமான பாடகனின் வாழ்க்கை,வலி,ஏக்கம் ஆகிய அனைத்தையும் அற்புதமாக சொல்லிய படம்.

#Rajini: மேற்கண்ட படங்கள் எல்லாம் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களாகும்.