Shoreline

வித்தியாசமாக இருக்கும் இந்த கரடியை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது ஏன் இந்த குறிப்பிட்ட நாட்டில் மட்டும் இருக்கிறது?

May 31 2021 12:12:00 PM

ஆஸ்திரேலியாவில் பல தனித்துவமான விஷயங்கள் இருக்கின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் ஒரு விலங்காகும். கங்காருவைப்போலவே இங்கிருக்கும் மற்றொரு தனித்துவமான விலங்கு தான் கோலா கரடி. இந்த இனத்தை சேர்ந்த கரடிகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. இந்த கரடிகள் அழிந்து வரும் பட்டியலில் இருக்கிறது. எனவே இந்த கரடிகளை பராமரிக்க ஆஸ்திரேலியா அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

kola-brar

இந்த கரடியின் காது பஞ்சைப்போல மென்மையாக இருக்கும். மூக்கு கருப்பு நிறத்தில் காணப்படும். முகத்தை பார்த்தால் எலி போன்று காணப்படுகிறது. மொத்தத்தில் ஒரு அழகிய பொம்மை போல காட்சியளிக்கும் கோலா கரடிகள் நிஜத்தில் ஒரு சாதுவான விலங்காகும். பருவநிலை மாற்றத்தினால் அழிந்து கொண்டிருக்கும் இந்த இனத்தில் தற்போது 43000 கரடிகள் மட்டுமே இருக்கிறது. இந்த கரடிகளின் பாதுகாப்புக்காக அந்த நாட்டு அரசாங்கம் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

kola-brar

கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த கரடிகள் உருவத்தில் சிறியவை. பெரும்பாலும் இவை மரத்திலேயே வாழ்வதால் மரக்கரடிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கரடிகளுக்கு வால் கிடையாது. மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கோலா கரடிகள் தண்ணீர் குடிப்பதில்லை. தனக்கு தேவையான தண்ணீரை அது யூகலிப்டஸ் மரத்தின் இலைகளிலிருந்து பெற்றுக்கொள்கிறது.

kola-brar

இந்த கரடிகள் தினமும் 400 கிராம் வரை யூகலிப்டஸ் இலைகளை சாப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 600 வகையான யூகலிப்டஸ் மரங்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட 30 வகையான மரங்களில் இருக்கும் இலைகளை மட்டுமே இந்த கரடிகள் உண்கிறது. கோடைகாலத்தில் மரத்தில் தொங்கிக்கொண்டு ஓய்வெடுக்கும் இந்த கரடி குளிர்காலத்தில் பந்துபோல சுருண்டு படுத்துக்கொள்ளும் தன்மையுடையது. பெரும்பாலும் மரத்திலேயே தனது பொழுதை கழிக்கும் இந்த் கரடிகள் காரணமில்லாமல் மரத்தை விட்டு கீழே இறங்குவது கிடையாது. ஆஸ்திரேலியாவில் காடுகளில் மட்டுமல்லாது சில மிருக காட்சி சாலைகளிலும் இந்த கரடி காணப்படுகிறது. ஒரு சில வீடுகளில் இதை செல்லப்பிராணியாகவும் வளர்த்து வருகின்றனர்.