Misc

மார்க்கெட்டில் மலிவாக கிடைக்குதுனு கண்ட மீனையெல்லாம் வாங்கி செய்ய வேண்டா! சாப்பிட ஏற்ற மற்றும் ஆரோக்கியமான மீன்கள்!

Oct 17 2020 12:29:00 PM

மீன் வாங்க முதலில் மார்க்கெட் சென்று கொண்டிருந்தேன், பின்னர் மீன் வியாபாரியின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு, வீட்டில் டெலிவரி செய்ய சொன்னேன். சண்டேக்களில் வியாபாரிகள் மிகவும் பிசியாக இருப்பார்கள். அப்போது ஹோம் டெலிவரி சான்ஸ் இல்லை. இடை நாட்களில் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்வதுண்டு. இப்போது மீன் ப்ரஷாக வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை காலை கொள்முதல் செய்யும் இடத்திற்கே நேரடியாக சென்று வாங்கும் பழக்கம் உருவாயிற்று. அதுவும் உங்க ஏரியா பக்கம் ஏரி, குளம், ஆறு பக்கத்தில் இருந்து அங்கு மீன் பிடிப்போரிடம் மீன் வாங்கினால் பேசும் பேரத்திற்கு மீன் கிடைக்கும், அதே நேரம் ப்ரஷாகவும் இருக்கும். இப்படி மீன் வாங்க சென்று, கற்றுக்கொண்ட எனது அனுபவத்தை உங்களிடம் பகிந்துகொள்கிறேன்.  

fish-market nutrition

மீன்களில் குளத்து மீன் ஒரு ருசி, ஆத்து மீன் ஒரு ருசி, கடல் மீன் தனி ருசி. ருசிக்காக மட்டும் அல்லாது ஆரோக்கியம் நிறைந்த மீன்களும் உண்டு. உதாரணத்திற்கு குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் நன்றாக சுரக்க வேண்டும் என்றால் பால் சுறாவை புட்டு போல செய்து கொடுத்தால் பால் நன்றாக சுரக்கும் என்பார்கள்.

fish-market nutrition

காலா மீனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கறி போன்றே இருக்கும். அதிகம் முள் இருக்காது. இதனை அவித்து குழம்பு வைத்தால் சுவை அலாதியாக இருக்கும். ருசியாக இருந்தால் போதும், முள் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்றால், கடல்வாளை மீன் சரியான தேர்வு. 

fish-market nutrition

சும்மா நொறுக்கு தீனி போல சாப்பிட, நெத்திலி வறுவல் சிறந்தது. விரால் மீன், விலாங்கு மீன் இவை பெரும்பாலும் சேற்றில் புதைந்து வாழும். இவற்றை பிடிப்பதும் எளிதல்ல. இதனது சுவை சிலருக்கு பிடிக்காது, ஏனெனில் சேற்று வாடை வீசும். ஆனால் உடலுக்கு நல்லது. வாளை விலாங்கு மீனில் மெர்குரி அதிகமாக இருக்கும் என்பதால், அதனை அடிக்கடி உண்ண கூடாது.

fish-market nutrition

சிலருக்கு புரதசத்து குறைபாடு இருக்கும், அவர்கள் சூரை மீனை உண்ணலாம். பார்க்க வஞ்சிரம் போலவே இருக்கும். இதனை தொடர்ந்து உண்டால் புரத குறைபாடு என்ற வார்த்தையே உங்க அகராதியில் இருக்காது. 

fish-market nutrition

மத்திமீன், இதனை ஏழைகளின் மீன் என்பார்கள். பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல தாதுக்கள் நிறைந்தது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக செயல்பட மத்தி சரியான தேர்வு. மன அழுத்தத்தை குறைக்க காணங்கெளுத்தி, இதயத்திற்கு பலம் சேர்க்க வஞ்சிரம், கொழுப்பே இல்லாத சுறா, மூல வியாதிகளுக்கு கிழங்கான் என மீனில் இல்லாத சத்துக்களே கிடையாது. இப்படி நீங்களும் மீன் வாங்க சென்று, கற்று கொண்டதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.