Rainforest

#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை!

Sep 21 2019

உடல்மொழி(body language) என்பது நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை(position), கண்ணின் அசைவுகள் மற்றும் சைகைகள் இவை அனைத்தையும் குறிப்பதே. body language குறித்து விஞ்ஞானம் கூறுவது, ஒருவரது உடல் மொழி, அவர் தன்னைப் பற்றி எப்படி உணர்ந்து வைத்துள்ளார் என்பதை வெளிக்கொணர்கிறது. 

#1. தன் மீது நம்பிக்கை உடைய மக்கள் தங்களது உடலை எப்போதும் வலிமையான(உடலை குறுக்கி பேசுவது கிடையாது) தோற்றத்தில் வைத்திருப்பர்கள். மேலும் அவர்கள் பெரிய கையசைவுகளைக் கொண்டே மனப்பாங்கையும் உணர்வையும் வெளிக்கொணர்வார்கள்.

#2. இவர்களுக்கு நேர் மாறாக, தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் உடலைக் குறுக்கி,கூன் அமைப்பில் வைத்திருப்பார்கள்.தங்களது உணர்வை வெளிப்படுத்த சிறு கையசைவுகளையே உபயோகிப்பர். 

#3. அறிவியல்  ரீதியாக உயர் சக்தியுள்ள, போல்டான  மக்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவு அதிகமாகவும் கார்டிசோல் (cortisol) அளவு குறைவாகவும் சுரக்கும். 

#4.வியப்பான ஒன்று என்னவென்றால்,  நீங்கள் வெறும் இரண்டு நிமிடங்கள் சக்தி அல்லது நம்பிக்கை உடைய நபர் போல் நடித்தாலும் கூட, உங்களது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும் என்றும், அவ்வாறே நம்பிக்கையற்ற மனிதர்களின் உடல் மொழிகளைப் பயன்படுத்தும் பொழுது விளைவு எதிரானதாக உள்ளது.

#5. தைரியமாக இருக்கும்போது நமது தோள்கள் நிமிர்ந்தும்,ஏதேனும் தவறு செய்திருந்தால் தோள்கள் தானாக தளர்த்தி கொண்டும் இருக்குமாம்.

#6. எதிரில் உள்ள ஒருவருடன் பேசும் போது உங்கள் கால்கள் அகண்டு அல்லது கோணலாக இல்லாமல் நேராக இருக்கிறது எனில், அவர் உங்களுக்கு விருப்பமான அல்லது மரியாதைக்குரிய நபர்.

#7. வேகமாக பேசுவோர்,தங்களது கைகளை வேகமாக செய்வோர் மற்றும் மாறி, மாறி செய்கைகள் செய்துக் கொண்டே இருப்பவர்கள் பொறுமை இல்லாத நபர்களாக இருப்பார்கள் என்கிறது உடல்மொழி. 

#8.நேர்முக தேர்வில் நீங்கள் தோள்களை தளர்த்தி கொண்டு பேசுவது உங்களது ஆர்வமில்லாமையையும் மன அழுத்தத்தையும் காட்டும்.

#9. ஒருவருடன் பேசுகையில் அதிகமாக மூக்கின் அருகே கைகளை கொண்டு போய் பேசுகையில் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்பதற்கான வெளிப்பாடு.

#10. அதுவே புருவத்தை உயர்த்தி பேசினால்,நீங்கள் சொல்லவந்ததை கூறுவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதன் உடல்மொழி.    

#body language, இந்த உடல்மொழி(body language) மூலமே ஒரு நபர் குறித்து பெரும்பாலானவற்றை அறிந்துகொள்ள முடியும்.அதனாலே நேர்முகத்தேர்வுகளில் body language முக்கிய அங்கமாக உள்ளது..