Lushgreen

கோலியின் ஆக்ரோஷம் கைகொடுக்குமா அல்லது மிஸ்டர் கூல் தோனியின் அறிவுரை வெல்லுமா? திடீரென பிசிசிஐ தோனியிடம் சென்றதன் நோக்கம் என்ன?

Sep 15 2021 10:54:00 AM

கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கையை உலக அளவில் உயர்த்தியது 20 ஓவர் போட்டிகள் தான். ஏனெனில் டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக்கொண்டு செல்லும். ஒருநாள் போட்டிகள் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நடக்கும். அவ்வளவு நேரம் யாருடா பொறுமையா உக்காந்து பாக்குறது என்று எல்லோரும் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் தான் 20 ஓவர் போட்டிகள் பிரபலமாகியது.

ms-dhoni mentor-for-world-cup

இதில் ஆட்டம் எப்படியும் 3 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தோனி தலைமையில் 2007ல் இந்தியா 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது. அதன்பிறகு இன்னும் இரண்டாவது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவால் வாங்க முடியவில்லை. இதற்கு பல காரணங்களை கூறலாம்.

ms-dhoni mentor-for-world-cup

கடந்த காலத்தில் நடந்ததை பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே அடுத்து நடக்க வேண்டியதை பற்றி பேசுவோம். அக்டோபர் மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி துவங்குகிறது. இந்த முறை இந்திய அணி சற்று வலுவாக இருப்பது போல தெரிகிறது. கிஷன், சூர்யா போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளது, அனுபவம் மிக்க அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது போன்ற பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

ms-dhoni mentor-for-world-cup

கேப்டன் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அவரால் இன்னும் உலகக்கோப்பையை வாங்கித்தர முடியவில்லை என்ற ஏக்கம் அனைவரிடத்திலும் உள்ளது. இதை உணர்ந்த இந்திய அணி நிர்வாகம் மிகவும் புத்திசாலித்தனமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அனுபவம் மிக்க தல தோனியை உலகக்கோப்பை போட்டிகளுக்காக சிறப்பு ஆலோசகராக நியமித்துள்ளது.

ms-dhoni mentor-for-world-cup

இவருடைய அனுபவம் கோலி மட்டுமல்லாது அணியின் அனைத்து வீரர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். 20 ஓவர் மட்டுமல்லாது 50 ஓவர், சாம்பியன்ஸ் ட்ரோபி என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் நம்ம தோனி. அவருடைய அனுபவம் ஜெயிக்குமா அல்லது கோலியின் ஆக்ரோஷம் ஜெயிக்குமா என்ற கேள்விக்கு இப்போது விடை தெரியவில்லை. இரண்டும் இணைந்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.