Misc

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! இந்த தொடருடன் ஐபில் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா மகேந்திர சிங் தோனி!

Oct 06 2021 03:26:00 PM

நமக்கு சின்ன வயசுல இருந்து ஒரு விஷயத்தில் நாட்டம் அதிகரிச்சு விட்டால் கடைசி வரை தொடர்ந்து அதை செஞ்சுக்கிட்டே இருப்போம். நம்ம சின்ன பசங்களா இருந்தப்போ நம்ம எல்லோரும் விரும்பி ரசிக்கும் நபர்கள் ரெண்டு பேர் தான். ஒன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னொன்னு மகேந்திர சிங் தோனி. ரஜினி என்னதான் வயசானாலும் இப்போ வரைக்கும் நடிச்சு நம்ம எல்லோரையும் சந்தோசமா வச்சுருக்கார். அதேபோல தான் நம்ம தோனியும்.

dhoni final ipl game

முதலில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அப்புறம் oneday, T20 போட்டிகளிலும் ஓய்வை அறிவித்து விட்டார். சரி நம்ம தல எப்படியும் சென்னை அணிக்காக ஐபில் போட்டிகளில் விளையாடுவார் என்ற நம்பிக்கையில் இன்றுவரை நாம் ஐபில் பார்த்துக் கொண்டுள்ளோம். என்னதான் நம்ம மிகப்பெரிய தோனி ரசிகனா இருந்தாலும் சமீப காலமாக அவருடைய விளையாட்டில் பழைய வேகம் இல்லை.

dhoni final ipl game

அவரால் நினைத்த படி மட்டையை தூக்கி சுற்ற முடியவில்லை. அடிக்கலாம்னு பேட்டை தூக்கினால் ஒன்னு கேட்ச் ஆகிருது, இல்லைனா போல்ட் ஆகிவிடுகிறார். மேட்ச் பாக்குற தோனி ரசிகருக்கே ரொம்ப பாவமா இருக்கு. எப்படி இருந்த மனுஷன், எத்தனை பேரை ஓடவிட்ட மனுஷன் இவரை இப்படி நிக்க வச்சு பால் டாட் பண்ணுறாங்களே என்று நமக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இந்த ஐபில்க்கு அப்புறம் கண்டிப்பா இவர் விளையாடமாட்டார் என்று எல்லோரும் கணிக்க தொடங்கிவிட்டார்கள்.

dhoni final ipl game

தற்போது தோனி எப்போ வரைக்கும் நான் ஐபில் விளையாடுவேன் என்று காணொளி ஒன்றில் அறிவித்துள்ளார். என்னுடைய கடைசி போட்டி என்று வரும்போது அது கண்டிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டியாகத்தான் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வந்து என்னை பார்த்து என்னை வழிஅனுப்பி வைக்க வேண்டும். சென்னையில் என்னுடைய கடைசி போட்டி விளையாடும்போது ரசிகர்களை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது நான் இந்த வருஷத்தோட ஓய்வு பெறமாட்டேன், அடுத்த வருசமும் சென்னைக்காக விளையாடுவேன் என்பதை டோனி தெரிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

dhoni final ipl game