Timeless

ஹிட்லருக்கே நம்ம ஆளு ஒருத்தர் அல்வா கொடுத்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? இந்தியனை குறைத்து மதிப்பிட்டா சும்மா விட முடியுமா?

Sep 16 2021 09:40:00 AM

ஒருவழியாக நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவும் நல்ல முறையில் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாக்கி போட்டியில் நமக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இந்த தருணத்தில் நம்முடைய மகத்தான ஹாக்கி வீரர் தயான் சந்த் எனக்கு நினைவில் வருகிறார்.

dhayanchand-hockey-player adolf-hitler

அவர் இந்திய அணிக்காக ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கும் ஹிட்லருக்கும் இடையே ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

dhayanchand-hockey-player adolf-hitler

ஹாக்கியில் ஹிட்லர் எங்கிருந்து வந்தார் என்று கேட்குறீங்களா? சம்மந்தம் இருக்குங்க. 1936ம் ஆண்டு பெர்லின் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தயான் சந்த். அவர் அடித்த ஹாட்ரிக் கோல்கள் தான் நமக்கு தங்கப்பதக்கத்தை வாங்கிக்கொடுத்தது.

dhayanchand-hockey-player adolf-hitler

இந்தப்போட்டியை பார்த்த ஹிட்லருக்கு தயான் சந்தை மிகவும் பிடித்துப்போனது. அவருடைய ஆட்டத்தைக்கண்டு வியந்து போன ஹிட்லர் அவரை அழைத்து அவருக்கு ஜெர்மனி குடியுரிமை வழங்குவதாக அறிவித்தார். மேலும் தங்கள் நாட்டு ராணுவத்தில் அவருக்கு மிக உயர்ந்த பதவியை வழங்குவதாகவும் வாக்களித்தார்.

dhayanchand-hockey-player adolf-hitler

ஆனால் இந்த இரண்டையுமே நிராகரித்தார் நம் தயான் சந்த். ஹிட்லரிடமே ஒருவர் எதிர்த்து நின்று அவர் கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்? தயான் சந்தை பற்றிய இந்த தகவலை அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.