Lushgreen

ஜகமே தந்திரம் படம் திரைக்கு வந்திருந்தாலும் இவ்வளவு வசூல் செய்திருக்குமா என்பது ச ந்தேகம் தான்! OTT ரிலீஸிலும் கல்லா கட்ட காத்திருக்கும் தனுஷ் படம்!

May 04 2021 06:09:00 PM

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் ஜகமே தந்திரம். இந்த படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் OTT யில் நேரடியாக ரிலீஸ் செய்யலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தார். இவரின் முடிவுக்கு நிறைய பேர் ஆரம்பத்தில் எ திர்ப்பு தெரிவித்தனர்.

dhanush jagame thanthiram net flix

தனுஷ் போன்ற முன்னணி நடிகரின் படத்தை OTT யில் ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என அனைவரும் விமர்சனம் தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த OTT ரிலீஸ் பற்றி படத்தின் நடிகர் தனுசும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் வாய் திறக்காமல் இருந்தனர்.

dhanush jagame thanthiram net flix

ஜகமே தந்திரம் படம் வரும் ஜூலை மாதம் நெட்பிலிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை நெட்டபிலிக்ஸ் குழுவினர் 17 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்கா நாட்டில் நிறைய வெளிநாட்டினர் நடிப்பில் டான் கதையின் பின்னணியில் உருவாகியுள்ளது.

dhanush jagame thanthiram net flix

நிறைய மொழிகளில் வெளியிட்டால் திரையரங்குகளை விட அதிக லாபம் பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் சம்பாதிக்கப்போவது நெட்பிலிக்ஸ் தான். இருந்தாலும் நம்ம தமிழ் நடிகரின் படம் வெளிநாட்டினரால் கொண்டாடப்பட்டால் நமக்கும் பெருமை தானே.

dhanush jagame thanthiram net flix