Timeless

கடலுக்கு அடியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றி இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா ? இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல் இருப்பது பெரிய விந்தைதான் !

Apr 20 2021 08:11:00 PM

பூமியில் நமக்கு தெரியாத ஏகப்பட்ட மர்மமான இடங்கள் உள்ளது. அது அத்தனையும் தேடி கண்டுபிடிப்பதற்கு இந்த ஒரு பிறவி நிச்சயம் போதாது. எனினும் நம்மால் முடிந்த சில இடங்களை தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் கடலுக்கு அடியில் இதுவரை யாரும் அறிந்திடாத மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றி இந்த பதிவில் காணலாம்.

denmark-waterfalls

கடல் என்பது ஒரு தனி உலகம். அதில் எண்ணிலடங்கா அதிசயங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் டென்மார்க் நீரிணை நீர்வீழ்ச்சி. இது பூமியில் இருக்கும் மற்ற நீர்வீழ்ச்சிகளை காட்டிலும் பல மடங்கு பெரியதாகும். அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து ஆகிய இரண்டையும் பிரிக்கும் கடல் பகுதியில் இந்த பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது சுமார் 11,500 அடி உயரத்திலிருந்து நீரை கொட்டுகிறது.

denmark-waterfalls

இந்த நீர்வீழ்ச்சி கடலின் மேற்பரப்பிலிருந்து 2000 அடி ஆழத்தில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்கிறது. ஒரு வினாடிக்கு சுமார் 175 மில்லியன் கனஅடி நீரை வெளியேற்றுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் நீரின் கொள்ளளவு என்பது 2000 நயாகரா நீர்வீழ்ச்சிகளின் கொள்ளளவிற்கு சமமாக இருக்கும் என்றால் யோசித்து பாருங்கள். உண்மையில் இதுதான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் கடலுக்கு அடியில் யாரும் காணமுடியாத இடத்தில் அமைந்துள்ளதுதான் வருத்தமான விஷயமாக இருக்கிறது.