Timeless

இது என்ன இப்படி ஒரு சட்டம்? இப்படியெல்லாம் செய்வதால் அப்படி என்ன பெரிதாக நடந்துவிட போகிறது?

May 12 2021 06:57:00 PM

நாள்தோறும் சாலை விபத்துகளால் ஏகப்பட்ட மரணங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்த துயர சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு நாடுகளும் பல கடுமையான சட்டங்களை வைத்திருக்கின்றது. அந்த வகையில் டென்மார்க்கிலும் ஒரு வித்தியாசமான சட்டம் அமலில் உள்ளது.

vehicles-in-denmark lights-all-the-day

டென்மார்க்கில் நீங்கள் வாகனம் ஓட்டும்போது உங்கள் வண்டியின் முகப்பு விளக்கு எப்போதும் எரிந்து கொண்டுதான் இருக்க வேண்டும். இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, கார், லாரி என எந்த வாகனமாக இருந்தாலும் கட்டாயம் முகப்பு விளக்கை போட்டுவிட்டு தான் வண்டியை ஓட்ட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனைக்கு 162 டாலர்கள் அபாரதமாகும். இந்திய மதிப்பில் 11,880 ரூபாய் அபராதத்தொகையாகும்.

vehicles-in-denmark lights-all-the-day

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரவு, பகல் என்ற கணக்கெல்லாம் கிடையாது. எல்லா நேரங்களிலும் கட்டாயம் முகப்பு விளக்கு எரிகிறதா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். பகலில் தான் வெளிச்சம் இருக்கிறதே எதற்கு முகப்பு விளக்கை போடவேண்டும் என்று அலட்சியமாக இருந்தால் அபராதத்தொகையை கட்டிவிட்டு வண்டியை ஓட்ட வேண்டியதுதான். இந்த சட்டம் பின்பற்றப்படுவதற்கு காரணமாக கூறப்படுவது சாலை விபத்துகள். பகலில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையே விபத்து நடக்கமால் இருப்பதற்காகவே இந்த விதிமுறையை டென்மார்க் அரசு கடைபிடிக்கிறது.

vehicles-in-denmark lights-all-the-day