காதல் தோல்வி சோகத்தில், தனக்குத் தானே கடிதம் அனுப்பிய அமெரிக்கா "பாப்" பாடகி!
  • 11:46AM Mar 09,2019 United States
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:46AM Mar 09,2019 United States

அமெரிக்காவின் "பாப்" இசையுலகில் மிக முக்கியமானவரும், திரை நட்சத்திரமுமான டெமி லோவட்டோ, காதல் தோல்வி காரணமாகத் தனக்குத் தானே கடிதம் அனுப்பிய செய்தி தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பிரபல "பாப்" இசை பாடகி டெமி லோவட்டோ, ஆடை வடிவமைப்பாளர் ஹென்றி லெவி என்பவரை நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். ஆனால் இவர்களது காதலை சில காரணங்களுக்காக டெமியின் குடும்பத்தினர் ஏற்கமறுத்துவிட்டனர்.

Related image

இதனால் காதலர்கள் இருவரும் பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டனர். டெமி பரஸ்பரமாகப் பிரிந்தாலும், அவரது காதலனையும், காதலையும் மறக்கமுடியவில்லை. காதல் தோல்வியில் இருந்து மீண்டுவர, ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார். காதல் தோல்வி சோகத்தில் இருந்து மீண்டுவர தன்னைத் தானே ஊக்குவிக்கும் வகையில் அவரது இல்லத்திற்கு அவரே ஒரு வாழ்த்து அட்டை அனுப்பிக்கொண்டார். அந்தப் பூங்கொத்துக்களால் நிறைந்த அந்த வாழ்த்து அட்டையில், "நீ அழகானவள், நீ அனைவராலும் நேசிக்கப்படுபவள், நீ மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குத் தகுதியானவள்" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த விஷயத்தை அவரே தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் இப்படிச் செய்ததற்கான முக்கியக் காரணம், காதல் தோல்வியில் வருத்தப்படுவதை விட, நம்மை நாமே சந்தோசபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவாம். டெமி லோவட்டோ சமூக ஆர்வலராகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அதேபோல அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமைக்காகப் போராடி வந்துள்ளார். டெமி லோவட்டோவின் காதல் தோல்வி குறித்து இவரது ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Top