REPUBLIC TV: ARNAB GOSWAMI மீது FIR!!! டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்திரவு!!!
  • 20:34PM Feb 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:34PM Feb 09,2019 Chennai

TIMES NOW நாளதழில் ஆசிரியராக வேலை செய்து வந்தவர் ARNAB GOSWAMI. ஏதோ பெரிதாக இருப்பது போல PROMO செய்து, கடைசியில் வேறு எவரையும் பேசவிடாமல் இடைமறித்து அவர் சார்ந்த கட்சிப் பக்கம் நியாயம் இருப்பது போலத் தோன்ற வைப்பதில் இவர் கில்லாடி. இதனாலேயே என்னவோ, பாஜக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலெல்லாம், TIMES NOW பதவியை ராஜினாமா செய்து விட்டு REPUBLIC TV என்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட CHANNEL-ல் EDITOR-ஆக வேலைக்கு சேர்ந்தார். மற்ற எந்தச் சேனலுக்கும் கிடைக்காத தகவல்கள் எல்லாம் இவருக்கு கிடைக்கும். ஒரு கட்டத்தில் மக்களே இவர் பாஜக ஆதரவாளர் என்ற எண்ணத்திற்குத் தள்ளப்பட்டனர். காரணம், எங்கு சுத்தினாலும் கடைசியில் முடிவடையும் இடம் பாஜகவுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

சமீப காலங்களில் காங்கிரஸை அதிகம் குறி வைத்து இவரது தலைப்புகளும், விவாதங்களும் இவர் CO-ORDINATE செய்யும் விதமும் அமைந்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸின் சசி தரூர் மனைவி வழக்கில் சில திடுக்கிடும் ஆடியோ பதிவுகள் இருப்பதாக ARNAB GOSWAMI வெளியிட்டு, சர்ச்சையைக் கிளப்பினார். இதனால், கடுப்பான சசி தரூர் நேராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆதாரமற்ற ஆவணங்களை வெளியிடுவதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து போலியான ஆதாரங்களை பொது ஊடகத்தில் வெளியிட்ட ARNAB GOSWAMI மீது வழக்குத் தொடர் உத்திரவிடப்பட்டுள்ளது.

ஊடகத்தின் சுதந்திரம் மற்றும் வளர்ச்சி, மக்கள் அதன் மீது வைக்கும் நம்பிக்கையைப் பொறுத்துதான் இருக்கும். ஆனால், ஊடகங்களோ, மக்களின் நம்பிக்கையை விட உணர்வுகளைத் தூண்டி விளையாடுவதிலும், அதைக் கொண்டு மக்களை தங்கள் CHANNEL-க்கு மட்டும் AUDIENCE ஆகவும் இருக்க வேண்டும் என்ற நிலையில், அரசியல் நிலைப்பாட்டைத் தங்கள் கையிலெடுக்கிறார்கள். இதனால், உன்மையான செய்தி மக்களைச் சென்றடையும் % என்று பார்த்தால் 30% இருந்தாலே அதிகம்தான். அதுவும் கூட வேலை மெனக்கெட்டு செய்திகளைப் பார்க்கத் தெரிந்தவர்கள் பார்த்து, மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதால்தான். இனியாவது திருந்துவார்களா???

Share This Story

You Might Also Like These
Related Stories
Top