KASHMIR: தீவிரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல்!!! தகவல் பொய் என்று பாதுகாப்புத்துறை விளக்கம்!!!
  • 19:14PM Mar 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:14PM Mar 09,2019 Chennai

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னரே, வேண்டுமென்றே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்த சில விஷமிகளும், அரசியல் ஆதாயத்திற்காக சில கட்சிகளும் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், SOCIAL MEDIA, WHATSAPP GROUP-கள் போன்றவற்றில் பரப்பப்படும் வதந்திகளால் அப்பாவிக் காஷ்மீரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீரில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ஜம்மு நகரில் உள்ள பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது ஏற்கெனவே பதட்டத்தில் இருக்கும் மக்களை இன்னும் பதட்டத்திற்கு ஆளாக்கியது. எந்த நேரத்தில் என்னாகுமோ என்ற நிலை நீடித்து வந்தது.

இந்த சூழலில், அங்கு பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில், தனது வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை நேற்று மாலை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், மேற்கண்ட தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருப்பதாகவும், இது தொடர்பான யூகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. தொடர்ச்சியாக இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதால், எந்த நேரத்தில் என்ன பிரச்சினை வரும் தெரியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top