குடிமகன்களுக்கு அதிர்ச்சியான செய்தி! தமிழகத்தில் குறையும் TASMAC கடைகள்!
  • 12:51PM Feb 08,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:51PM Feb 08,2019 Chennai

தமிழ்நாட்டில் இருக்கும் TASMAC கடைகள் எப்போது மூடப்படும் என்று தமிழக பெண்கள் யோசித்து வரும் நிலையில், இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கல் செய்த ஓ.பி.ஸ், குடிமகன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றைத் தெரிவித்தார். இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், TASMAC குறித்த பட்ஜெட் பற்றி துணை முதலமைச்சர் ஓ.பி.ஸ் தெரிவித்தார். அதில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது புரட்சி தலைவி அம்மா, தமிழகத்தில் TASMAC கடைகள் படிப்படியாக குறையும் என்று தெரிவித்திருந்தார்.

Image result for tasmac

அதன்படி தமிழகத்தில் இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் 7,896 டாஸ்மாக் கடைகள் இருந்துள்ளன, இப்போது அவை படிப்படியாக மூடப்பட்டு தற்போது 5,198 டாஸ்மாக் கடைகளாக குறைக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பி.ஸ் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் TASMAC கடைகள் மூலமாகக் கிடைத்த வருவாய் .6724 கோடி என்றும், வரும் நிதியாண்டில் எப்படியும் TASMAC கடைகள் மூலமாக 7,262 கோடி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இது ஒருபக்கம் இருக்க, மதுவுக்குப் பிரபலமான புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வரி உயர்த்தியுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Tags

Share This Story

Top