DECCAN ODESSEY: என்னது ஒரு TRAIN TICKET மூணு லட்ச ரூபாயா???
  • 16:28PM Dec 03,2018 Chennai
  • Likes
  • 0 Views
  • Shares

ASIA-விலேயே சிறந்த ரயில் எந்த நாட்டுல இருக்குது தெரியுமா??? நம்ம இந்தியாவுலதான். அட, சிரிக்காதீங்க… நாம போற ரயிலை வச்சுகிட்டு இந்த ரயிலை கணக்குப் பண்ணாதீங்க. இது உன்மையிலேயே வேற LEVEL ரயில். இந்தியாவுலதான் பணக்காரங்களுக்குத் தனி மரியாதையும், மத்தவங்கங்களுக்குத் தனி மரியாதையும் இருக்கே. ரயில்வே மட்டும் மாறிடுமா என்ன??? கெவலம் A/C COACH TOILET இருக்கிற சுத்தம் RESERVED-ல இருக்காது. RESERVED-ல இருக்கிற சுத்தம் UNRESERVED வாய்ப்பே இல்லை. இந்த TRAIN சும்மா பொழுதுபோக்குக்காகவும், பெரிய மனுஷங்க வீட்டு விசேஷத்துக்காகவும் மட்டும்தான். இந்த ரயிலும் லேசுப்பட்டதில்லை. ASIA-விலேயயே சிறந்த ரயில்னு தொடர்ச்சியா ஐந்து வருடங்கள் இதுதான் பரிசைத் தட்டிட்டு வந்திருக்கு.

“HIDDEN TREASURES OF GUJARAT”' என்ற பெயரில் DECCAN ODESSEY ரயில் குஜராத்தில் ஓடுகிறது. மும்பை, வதோரா, பலிடானா, சசினா கிர், கட்ச், மாதேரா, பதன், நாசிக் வழியாக மும்பை திரும்புவதுதான் இந்த ரயிலின் வழித்தடம். “INDIAN ODESSEY” ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டு சவால், மதுபூர், ஆக்ரா, ஜெய்ப்பூர், உதய்பூர், வதோரா, ELLORA CAVES, வழியாக மும்பை அடைகிறது. “INDIAN SAJOURN” ரயில் மும்பையிலிருந்து வதோரோ, உதய்பூர், ஜோத்பூர், சாவல், மதோபூர், ஆக்ரா, ஜெய்பூர், டெல்லி செல்கிறது. “JEWELS OF DECCAN” - மும்பை, பிஜப்பூர், பட்டர்க்கடை, ஹம்பி, ஹைதராபாத், ELLORA CAVES, AJANTHA CAVES வழியாக மும்பை அடைகிறது. “MAHARASHTRA SPLENDOR” ரயில் மும்பையிலிருந்து புறப்பட்டு வதோரா, ஜோத்பூர், சாவல், மதோபூர், ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லியை அடையும். “MAHARASHTRA WILD TRIAL” மும்பையிலிருந்து அவுரங்கபாத், ரம்தெக், தடோபா, அஜந்தா கேவ்ஸ், நாசிக் வழியாக மீண்டும் மும்பையை அடையும். இப்படி 6 மார்க்கங்களில் DECCAN ODESSEY ரயில் இயக்கப்படுகிறது. இவை அனைத்துமே 8 நாள்கள் 7 இரவுகள் பயணத் திட்டம் கொண்டவை. ஒரு கேபின் வாடகை வெறும் 3,00,000-தான். திருமண நிகழ்ச்சிகளுக்கும் இந்த ரயில் வாடகைக்கு கிடைக்குமாம். ஆனால், RESERVATION அத்தனை சுலபமல்ல. முன்கூட்டியே பதிவு செய்தால், ரயில் முழுவதையும் அலங்காரம் வேறு செய்து தருகிறார்களாம்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ரயிலில் என்று கேட்பதற்கு பதில் என்ன இல்லை என்று கேட்கலாம். அறைகளில் படுக்கை, மேஜை, டெலிபோன் வசதி, குளிர்சாதன வசதி, டிவி, WIFI நவீனக் குளியல் அறை, என FIVE STAR ஹோட்டல்களை விஞ்சும் வகையில் வசதிகள் உள்ளன. 24 மணி நேரமும் ரூம் சர்வீஸ் உண்டு.  சுற்றுலாப் பயணிகளின் மனதுக்கு இதமளிக்கும் வகையில் இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். ரயிலின் MAHARASHTRA, INDIAN VEG & NON-VEG என இரண்டு RESTAURANT-களும், CONTINENTAL CUSINE, ORIENTAL CUSINE RESTAURANT-களும் இருக்கின்றன. ரயில் நிற்கும் இடங்களின் பாரம்பார்ய உணவுகளும் தயாரித்து வழங்கப்படுகின்றன. அசைவ பிரியர்களுக்காக ஆங்காங்கே ரயில் நிற்கும் இடங்களிலேயே சிக்கன், மட்டன், மீன் வகைகள் FRESH-ஆக வாங்கி STOCK வைத்துக் கொள்ளப்படுகிறது. நாம் விரும்பும் உணவுகளைக் கேட்டாலும் ருசியாகவும் சுடச்சுடவும் சமைத்துத் தருகிறார்கள். தினமும் காலையில் நம் அறைக்கே காபி, டீ வந்து விடும். தினசரிகளும் தந்து விடுகிறார்கள். இப்படி அத்தனை வசதிகளையும் கொண்டு இருக்கும் இந்த ரெயிலை நாமெல்லாம் கேள்விப்படுவதோடு நின்று விட வேண்டும். அனுபவிக்க ஆசைப்பட்டால் ஒரு சராசரி மனிதனுக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு சம்பளம் தேவைப்படும் போல!!!

You Might Also Like These
Related Stories
Top