Exquisite

இந்த உலகம் இன்னுமா இதையெல்லாம் நம்ம்பிடிக்கிட்டு இருக்கு? இப்படியே போனா ரொம்ப கஷ்டம் தான்

Apr 15 2021 09:30:00 PM

இன்டர்நெட், ஸ்மார்ட்போன் இதெல்லாம் வந்தபிறகு உலகமே சிறிய வட்டம் போல சுருங்கி நொடிப்பொழுதில் எவ்வளவு பெரிய வேலைகளை செய்து முடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நவீன யுகத்திலும் சில அறிவிலிகளும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. ஒடிசாவில் உள்ள கிராமத்தில் ஒரு விநோதமான பழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

dead-body-rituals

ஒருவர் இறந்து போன பிறகு அவரை உயிருடன் மீண்டும் கொண்டுவர முடியுமா ? அந்தக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் இறைவன் அருளால் அப்படி சில சித்து விளையாட்டுகளை செய்து காட்டியுள்ளனர். அதெல்லாம் இந்தக்காலத்தில் நடக்கும் என்பது மூடநம்பிக்கையின் உச்சமாகும். ஆனால் இதை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சமீபத்தில் அந்த கிராமத்தில் இறந்தவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கு பதிலாக உயிர்ப்பிக்கிறேன் என்று கூறி வேறு விநோதமான சடங்குகளை செய்துள்ளனர்.

dead-body-rituals

கோவில் திருவிழா சமயத்தில் இறந்துபோன அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த நபரின் உடலை இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்யாமல் அவரை உயிரோடு எழுப்பி நடமாட வைக்க போகிறோம் என்று கூறி கிராமத்தில் உள்ள சிலர் செய்த வித்தியாசமான சடங்குகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைக்கண்ட பலரும் இதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை ஒன்னும் செய்ய முடியாது என்றுதான் தோன்றுகிறது.