Shoreline

அடேங்கப்பா இவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியது இந்த விஷயத்துக்கா? இந்த விஷயத்தில் நம்ம நாடு முதலிடம் என்று நினைத்தோமே! ஆனால் இவங்க எப்போ வந்தாங்க?

Jun 11 2021 06:24:00 PM

ஆஸ்திரேலியா நாட்டை பற்றி பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் கால்நடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான். ஆடு, மாடுகள் வளர்ப்பு இந்தியாவில் தான் அதிகம் என்று நாம் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நம் நாட்டுக்கு இணையாக ஆஸ்திரேலியாவிலும் கால்நடை பராமரிப்பு நடைபெறுகிறது.

dairy-australia

ஆஸ்திரேலியாவில் தான் உலகின் மிகப்பெரிய கால்நடை பராமரிப்பு மையம் அமைந்துள்ளது. இந்த இடத்தின் மொத்த பரப்பளவு சுமார் 23,677 கிலோமீட்டர். இந்த அளவை ஒப்பிட்டு பார்த்தால் அது இஸ்ரேல் நாட்டை விடவும் பெரிதாக இருக்கிறது. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ் மாகாணத்தை போல 7 மடங்கு பெரியதாகும் இந்த கால்நடை பராமரிப்பு மையம்.

dairy-australia

இந்த மிகப்பெரிய கால்நடை பராமரிப்பு மையத்தில் ஏராளமான ஆடு,மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. காட்டு விலங்குகளுக்கு இணையாக செல்லப்பிராணிகள், கால்நடைகள் என்று எல்லா விலங்குகளிடத்திலும் ஈடுபாடும், அக்கறையும் கொண்டு பராமரித்து வருகிறது ஆஸ்திரேலியா நாடு. தங்கள் நாட்டுக்கென்று கங்காரு, கோலா கரடி என்று தனித்துவமான சில விலங்குகள் இருந்தாலும் மற்ற விலங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பாதுகாத்து வரும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.