#Fitness தினமும் உடற்பயிற்சி செய்வதால், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
  • 14:03PM May 04,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 14:03PM May 04,2019 Chennai

அறுவது வயதிலும் முப்பது வயது இளைஞரை போலச் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கு உடற்பயிற்சி உறுதுணையாக இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதனால் தசைகளின் வலிமை அதிகரிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இருவது, இருபத்தைந்து வயதில் இருந்து தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு முதுமை தோற்றம் ஏற்படாது. இப்படித் தினமும் உடற்பயிற்சி செய்வதனால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

Related image

தினமும் உடற்பயிற்சி செய்வதனால் தசைகள் வலிமை பெரும். திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிசெய்யும். இவை எதிர்காலத்தில் தசைகளின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும். அதேபோலத் தினமும் உடற்பயிற்சி செய்வதனால் எலும்புகள் வளர்ச்சி பெரும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ், ஆர்தரிடிஸ் ஆகிய நோய்கள் ஏற்படாது.

Related image

பொதுவாக உடற்பயிற்சி செய்வதனால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும், இதனால் இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதனால் மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்கள் அதிகரிக்கத் தூண்டுதலை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி மூளையில் புதிய அணுக்களை உருவாக்கி மற்ற மூளை அணுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தும். இதனால் நமது மனநிலை அமைதியாகவும், சந்தோசமாகவும் இருக்கும்.

Related image

தினமும் உடற்பயிற்சி செய்தால் குடல் புற்று நோய், மார்பக புற்று நோய், நுரையீரல் புற்று நோய் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவும். உடற்பயிற்சியினால் கேன்சர் செல்கள் அதிகப்படியாகக் குறையும் என்று நிரூபித்துள்ளனர். உடற்பயிற்சி செய்வதனால் நமது ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆயுள் கூடும். வயதானாலும் இளமையான தோற்றத்துடன் காணப்படுவீர்கள், முக்கியமாகச் சுறுசுறுப்பாக இருப்பிர்கள்.

Image result for exercise

முதுகுவலி, மூட்டுவலி இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால் வலி குறையும். நன்கு முதுகைவளைத்து செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். முதுகுவலிக்கு மருந்துகளைக் காட்டிலும் உடற்பயிற்சி சிறந்த வழியாகும். அதேபோல நடைப்பயிற்சி மேற்கொண்டால் மூட்டுவலி குறையும். உடற்பயிற்சி செய்வதனால் நல்ல தூக்கம் உருவாகும். ஆனால் உடற்பயிற்சி செய்தவுடன் தூங்க செல்லக்கூடாது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top