Rainforest

#Molecular Medicine : எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை தேடி தரும் Molecular Medicine படிக்க அரிய வாய்ப்பு !

May 08 2019 01:36:00 PM

சைப்ரஸ் நாட்டில் உள்ள Molecular Medicine கல்வி நிறுவனத்தில் உதவி தொகையுடன் post graduation மற்றும் research and development குறித்து படிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.cyprus institute of neurology and genetics கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியான cyprus school of molecular medicine நான்கு முக்கிய துறைகளில், தகுதியான இந்திய மாணவர்களுக்கு உதவி தொகையுடன் கூடிய முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது..

துறைகள் பின்வருமாறு, biomedical research, neuroscience, medical genetics, Molecular Medicine..பயில விரும்பும் மாணவர்களுக்கு post graduation மற்றும் ph.dபடிப்புகளுக்கு 2000 யூரோ உதவி தொகையாகவும் வழங்கப்படுகிறது.ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனி தனியே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

C.S.M.Mநிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.விண்ணப்பிக்கையில் சரியான ஆவணங்கள் கொடுக்கப்படாத பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

post graduation செய்ய விரும்புபவர்கள் முறையான துறைசார்ந்த under graduation முடித்திருக்க வேண்டும்.அதே போல Ph.d செய்யவிரும்புபவர்கள் துறைசார்ந்த post graduation முடித்திருப்பது அவசியம்.மேலும் விபரங்களுக்கு www.cing.ac.cy என்ற வலைத்தளத்தை அணுகலாம்

#manonmaniam sundaranar university : PG Integrated Degree Programmes - ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் படிப்புகள்..!