Highrise

இப்படி ஒரு சமையலறையை எங்காவது பார்க்க முடியுமா ? சமைப்பதற்கு கூட்டிட்டு வந்து சாவு மணி அடிக்க வைக்கிறாங்களே !

Apr 25 2021 09:31:00 PM

அமெரிக்காவில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கட்த்ரோட் கிட்சன். இது ஒரு மாறுபட்ட சமையல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை ஆல்ட்டன் பிரவுன் தொகுத்து வழங்குவார். 4 சமையல் நிபுணர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வர்.

cut-throat-kitchen

மொத்தம் மூன்று சுற்று போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் தோற்று வெளியேறிவிடுவார். இறுதியாக இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். எல்லா போட்டிகளிலும் போட்டி முடிந்த பிறகு வெற்றியாளருக்கு பணமோ, பரிசோ வழங்குவார்கள். இங்கு எல்லாம் தலைகீழாக இருக்கிறது. போட்டியின் ஆரம்பத்திலேயே அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டுவிடும். ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே என கனவு காணக்கூடாது. போட்டியார்களுக்கு அந்த பணம் மூலமாகத்தான் ஆப்பு தேடி வரும்.

cut-throat-kitchen

வெறும் சமையல் செய்வது மட்டும் போட்டியல்ல. பல வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படும். அதை செய்து கொண்டுதான் சமைக்க வேண்டும். அதிலிருந்து தப்பிக்க பணத்தை பயன்படுத்தி டாஸ்க்குகளை ஏலத்தில் எடுத்து மற்ற போட்டியாளர்களுக்கு கொடுப்பதுதான் போட்டியின் விதி முறை. ஒவ்வொரு போட்டியாளருக்கும் தலா 25000 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படும். அந்த பணத்தை அவர்கள் ஏலத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் தோற்பவர் கையிலுள்ள மீதிப்பணத்தை கொடுத்துவிட்டு சென்று விட வேண்டும். இறுதி வரை தாக்குப்பிடித்து நிற்கும் 4வது போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஏலத்திற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள பணம் அவருக்கு பரிசாக அமையும். மிக சுவாரசியமான இந்த சமையல் போட்டி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும்.