Exquisite

அய்யயோ இப்படி ஒரு சாபம் பெற்ற பொருள் நமக்கு வேணாம்பா! ஆள விடுங்கடா சாமி!

Apr 07 2021 08:58:00 PM

இந்த பூமியில் நமக்கு தெரியாத நிறைய மர்மங்கள் இருக்கிறது. அந்த மர்மத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போது நம்மை திகிலடையச்செய்யும் பல்வேறு சம்பவங்கள் பின்னணியில் இருக்கும். அப்படி இரு சம்பவம் தான் இந்த சிறுவனின் ஓவியம்.

boy-crying-painting

1985ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த ஒருவர் இந்த ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தில் உள்ள சிறுவனின் முகம் அழுவது போல வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியத்தை லட்சக்கணக்கான மக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வைத்தனர். யாரும் எதிர்பாராத விதமாக இந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்த வீடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தீ பிடித்து எரிந்து போயின.

boy-crying-painting

இத்தாலியின் தீயணைப்பு வீரர்கள் தீ பிடித்த பல வீடுகளில் இருந்தும் இந்த ஓவியத்தை கைப்பற்றியுள்ளனர். ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு ஓவியம் கூட தீயினால் எந்த வித பாதிப்பும் இன்றி இருந்தது. வீட்டில் பல பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையிலும் இந்த ஓவியம் மட்டும் தீ பிடித்த ஒரு வீட்டில் கூட ஒரு சிறு கீறலும் இல்லாமல் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பயந்து போன மக்கள் இதை சபிக்கப்பட்ட ஓவியம் என்று கூறி தூக்கி எரிந்தனர். இது தூக்கி வீசப்பட்ட பிறகு இத்தாலியில் வீடுகளில் தீ பிடிப்பது நின்று போனது. அன்றிலிருந்து உலகத்தின் எந்த ஒரு பகுதியிலும் இந்த ஓவியம் வீடுகளில் வைப்பது தடைசெய்யப்பட்டு விட்டது.