2030-ல் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு எது தெரியுமா?
  • 22:44PM Jan 10,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 22:44PM Jan 10,2019 Chennai

தற்போது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் அமெரிக்கா 2030-ல் மூன்றாம் இடத்திற்குச் செல்லப்போகிறது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? இங்கிலாந்தைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனம் Standard Chartered, 2030-ல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட பத்து நாடுகள் எதுஎது என்பது பற்றிய பட்டியலைக் கணித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ள அமெரிக்கா பின்னுக்குத்தள்ளப்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தைச் சீனாவும், இரண்டாம் இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன. இந்த கணிப்பு ஒவ்வொரு நாட்டின் GDP-ஐ வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை எதிர்பார்க்காத சில நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்கு தள்ளி 2030-ல் இந்தோனேசியா அந்த இடத்திற்கு வரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில், துருக்கி, பிரேசில், ரஷ்யா மற்றும் எகிப்து போன்ற நாடுகள் இடம்பிடித்துள்ளன. தற்போது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று கருதப்படும் ஜப்பான் மற்றும் ஜெர்மனி 2030-ல் பின்னடையும் என்று கூறியுள்ளனர்.

Image result for world's biggest economy

Share This Story

You Might Also Like These
Related Stories
Top