வேட்பாளர் தேர்வா அல்லது கார்ப்பரேட் இன்டர்வியூவா???
  • 11:35AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:35AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

       இதற்கு முன் எப்போழுதும் இல்லாத அளவு ஒரு தொகுதியிலேயே இத்தனை பிரச்சினைகள் நடந்ததே இல்லை.  அது எல்லாவற்றையும் விடத் தன்னிச்சையான அரசு சார் இயக்கங்களான தேர்தல் ஆணையம், நீதித்துறை உட்பட அனைத்துத் துறைகளுமே நடுநிலையுடன்தான் செயல்படுகிறதா என்று மக்கள் சந்தேகப்படத் துவங்கும் அளவிற்கு தங்கள் செயல்பாடுகளைச் செய்து வருகிறது.  அதிலும் குறிப்பாக, இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கு கொடுக்கப்பட்ட காலம், அதை நடைமுறைப்படுத்தும் விதம் மிகவும் வித்தியாசமாக இருப்பதுதான் வேடிக்கை.

       தேர்தல் ஆணையம் மனுக்களை சரி பார்த்து, புதிதாகக் களமிறங்கும் வேட்பாளர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி உதவுவதற்குப் பதிலாக, தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் செய்வதைப் போல Elimination Process செய்வதுதான் அந்த வித்தியாசமான நடைமுறை.  கார்ப்பரேட் கம்பெனிகளில்தான் Interviewku வரும் நபர்களிடம் என்ன குறை என்பதைக் கண்டுபிடித்து அதனைக் காரணம் காட்டி அவர்களை வேலைக்குச் சேர்க்காமல் துரத்தும் வேலையைச் செய்யும்.  அதே போல தேர்தல் கமிஷனும் தற்போது 145 விண்ணப்பங்களில் Elimination Processஐ திறம்படச் செய்து வெறும் 72 பேரைத் தேர்வு செய்திருக்கிறது. விஷாலுக்காக மட்டும் சொல்லவில்லை, நிராகரிக்கப்பட்ட 73 பேரின் காரணங்களை வெளிப்படையாகத் தேர்தல் கமிஷன் பேசத் தயாரா???

       காமராஜரை அவருடைய வாக்காளர் படிவத்தை நிரப்பச் சொன்னால் எப்படி நிரப்பியிருப்பார்??? அப்படி சிறிய தவறுகளுக்கு நிராகரிக்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்??? ஃபார்ம்கள் எப்படி நிரப்ப வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஏதேனும் ஏற்பாடுகள் இருந்ததா??? கவனிக்க வேண்டிய குற்றப் பின்னணியை விட்டு விட்டு, அறியாமையைக் காரணம் காட்டினால், அதுதான் நடுநிலைமையா? 21 வயதுக்கு மேல் உள்ள எவர் வேண்டுமானாலும் படிப்பு, பொருளாதார பின்னணி ஏதுவாக இருந்தாலும் தேர்தலில் நிற்கலாம் என்பதுதானே தேர்தலின் அடிப்படையே… அதை விடுத்து ஏதோ கார்ப்பரேட் கம்பெனி இன்டர்வியூ போல Elimination Process ல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஈடுபடுவது, புதியவர்கள் அரசியலுக்கு வருவதைக் கொஞ்சமும் ஊக்குவிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top