Misc

மீண்டும் புது வேகத்துடன் வந்திருக்கும் வெர்சன் 2.0! எதற்கும் தயாராகவே இருக்க வேண்டியது தான்

Apr 07 2021 08:36:00 PM

கொரோனா வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டாலும் இன்னும் அதிலிருந்து நாம் முழுமையாக மீண்டு வர முடியவில்லை. சற்று குறைந்தது என்று சந்தோசமாக இருந்த நேரத்தில் இப்போது மீண்டும் இரண்டாவது மூன்றாவது அலைகள் வீச தொடங்கிவிட்டது. உலக அளவில் மட்டுமல்ல நம் நாட்டிலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது.

covid-2-wave

பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்படுத்தி வந்தாலும் கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாமல் இருப்பது பலரையும் மனதளவில் வெகுவாக பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் நம்மையும் நமது குடும்ப உறுப்பினர்களையும் இன்னும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களின் மனதை நிலைகுலைய செய்துள்ள இதிலிருந்து மீண்டு வர நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

covid-2-wave

நோய் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தினால் பலரும் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இன்னும் பலரை சிரமப்படுத்தி வருகிறது. பயத்தின் காரணமாக பலரும் வீட்டிலேயே வருடக்கணக்கில் இருப்பதால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு மனதை திடமாக தைரியமாக வைத்துக்கொள்ள வேண்டும். யோகா மற்றும் தியானம் செய்வதால் உங்களால் மன அமைதியை பெற முடியும். வீட்டிலேயே கல்வி கற்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது சிறிது நேரம் இடைவெளி கொடுத்து விளையாட வைக்க வேண்டும். அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து விளையாடலாம். இதனால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வாக இருக்க முடியும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்றினாலே போதுமானது. இதன் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும்.