RAFALE-HAL: RAFALE விவகாரத்தில் இருந்து தப்பிப்பதாக நினைத்து, காங்கிரஸுக்கு இன்னொரு பிரம்மாஸ்திரத்தைக் கொடுத்த பாஜக!!! HAL-க்கு மூடுவிழா நடத்த முயற்சிகள் நடக்கிறதா???
  • 21:25PM Jan 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:25PM Jan 07,2019 Chennai

நாடாளுமன்றத்தில் ராகுலம் விடாமல் RAFALE பற்றிய கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். பாஜகவும் முடிந்த அளவு பதில் சொல்லாமலே டபாய்த்துக் கொண்டிருக்கிறது. அதிலும், ஒரு கேள்விதான் பாஜகவை ரொம்பவே டென்ஷனாக்கும் கேள்வி. அம்பானிக்கு எந்த அடிப்படையில் அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்ற கேள்விதான் அது. என்னதான் காரணம் சொன்னாலும், DASSAULT நிறுவனம் ஒப்பந்தம் பெற்ற உடனேயே RELIANCE-உடன் ஜேழடி சேரும் என்று மத்திய அரசுக்குத் தெரியாமலேயே இருக்கட்டும், துவங்கி வெறும் 3 மாதங்களுக்குள்ளாக, எந்த முன் அனுபவமும் இல்லாத REடIANCE—ஐ DASSAULT கூட்டு சேர்க்க என்ன காரணம் என்று கூடக் கேட்காமல் ஒப்பந்தத்தை தொடர எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்விக்கு நியாயமான பதிலை அவர்களால் சொல்லவே முடியாது. இது போக, இரண்டு தினங்களுக்கு முன் ERICSSON நிறுவனத்திற்கு RELIANCE தர வேண்டிய 500 கோடி ரூபாயைக் கொடுக்காமல் வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்ற வழக்கில் வேறு RELIANCE மண்ணைக் கவ்விய கதையும் நடந்தது.

இது போதாதென்று சில தினங்களுக்கு முன் வெளியான செய்தி, HAL நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காக 1000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றது தெரிய வர, இதையும் RAFALE-டன் சேர்த்து ராகுல் போட்டு வாங்க, ஆக்ராஷமான நிர்மலா சீதாராமன் அன்றே பதிலளிக்காமல், அடுத்த நாள் வந்து ஒரே ஆவணங்களாகக் காட்டித் தள்ளினார். அங்குதான் ஆரம்பித்தது சர்ச்சையே. HAL-க்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ORDER-களைக் கொடுத்ததாகச் சொல்லி, பிறகு அதற்கான ஒப்பந்தங்கள் எங்கே என்று கேட்டதும், ஹி..ஹி… ஒரு லட்சம் கோடி அல்ல, 26,570 கோடி ரூபாய்க்கு தற்போது ஒப்பந்தம் வழங்கப்பட்டது எனவும், மீதம் 73000 கோடிக்கு ஒப்பந்தம் போட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அப்படியே திருப்பிப் போட்டார்கள். சரி, கிட்டத்தட்ட 27000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதென்றால், HAL எதற்காக 1000 கோடி கடன் வாங்க வேண்டும் என்று கேட்டால், அதில் 15,740 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை மத்திய அரசு தரவேண்டி இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனமல்லாத RELIANCE-க்கு 20000 கோடி ரூபாயை உடனடியாக செட்டில் செய்திருக்கிறார்கள். இன்னொரு கேள்வியும் இருக்கிறது. HAL-க்கு வர வேண்டிய ஒப்பந்தத்தைப் பிடுங்கித்தான் RELIANCE-க்கு வழங்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். அப்படி என்றால், புதிதாக 73000 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் HAL-க்கு கிடைக்குமா அல்லது RELIANCE-க்கா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இது ஒருபுறம் இருக்க, பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ச்சியாக ஏதாவது காரணங்களைச் சொல்லி மூடுவதை வழக்கமாகவே மாற்றியிருக்கிறது பாஜக. ஆக, HINDUSHTAN AERONAUTICS LIMITED எனப்படும் HAL-ஐயும் மூடுவதற்கு முயற்சிகள் நடக்கிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காரணம் இல்லாமல் இல்லை. HAL-ல் வேலை செய்யும் ENGINEER-கள் மற்றும் TECHNICIANS அனைவரும் வேலை இழந்தால் என்ன ஆகும்??? அவர்களுக்கு வேலை தரும் அளவுக்கு ஒரே ஒரு நிறுவனம்தான் மிச்சமிருக்கிறது. அது புதிதாகத் தொடங்கப்பட்ட DASSAULT-RELIANCE என்று ராகுல் அதிர வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார். அது மட்டுமல்ல, HAL ஊழியர்களைச் சந்தித்து, அப்படி எதுவும் நடக்காது, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி வேறு கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம். ஏற்கெனவே, RAFALE விவகாரத்தில் பாஜக சரியாக பதிலளிக்கவில்லை என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் பொருமிக் கொண்டிருக்கும் நேரத்தில், தேர்தல் நெருங்கும் சமயமாகப் பார்த்து காங்கிரஸுக்கு இன்னொரு பிரம்மாஸ்த்திரத்தையும் பாஜக கொடுத்துவிட்டதாகவே கருதுகிறார்கள். HAL-ஐ பாஜக என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top